Advertisements

உங்கள் ஏ.டி.எம் பின்நம்பரை உடனடியாக மாற்றுங்கள்!

டிஎம் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவரையும் கதிகலங்க வைத்திருக்கிறது கடந்த வாரம் வெளியானதொரு அதிர்ச்சி செய்தி. கிட்டத்தட்ட 32 லட்சம் டெபிட் கார்டுகளின் பின்நம்பர்கள் திருடு போயிருப்பதாகச் சொல்லப்பட்டது. பழைய கார்டுகளுக்குப் பதிலாக புதிய டெபிட் கார்டுகளை மாற்றித் தரத் தயார் என சொன்னதோடு, ஏற்கெனவே உள்ள டெபிட் கார்டுகளின் பின் நம்பரை உடனே மாற்றவும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன வங்கிகள். 

சீனாவில் அங்கீகாரமற்ற முறையில் இந்த எண்கள் பயன்படுத்தப்பட்டு, கணக்குகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிற‌து என்கிற குற்றச்சாட்டைத் தொடர்ந்து வங்கிகள் இந்த பகீர் தகவலை வெளியிட்டுள்ளன. 

இங்கிருக்கும் வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, அதேபோன்ற கார்டுகள் குளோனிங் முறையில் போலியாகத் தயாரிக்கப்பட்டு, சீனாவிலும் அமெரிக்காவிலும் பல்வேறு பொருட்களை வாங்க, பயன் படுத்தப்படுகிறது. மொத்தமுள்ள 32 லட்சம் கார்டுகளில் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டு வகைகளைச் சேர்ந்தது என்றும், மீதமுள்ள 6 லட்சம் கார்டுகள் ரூ – பே கார்டுகள் என்றும் வங்கிகள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலான கார்டுகள் எஸ்.பி.ஐ மற்றும்     ஹெச்.டி.எஃப்.சி வங்கிகளைச் சேர்ந்த கார்டுகள்.

பாதுகாப்பான பணப் பரிமாற்றத்துக்கு நீங்கள் என்ன‌ செய்யவேண்டும்?

1. வங்கிகளின் இணையதளங்களை நீங்களே டைப் செய்து செல்லுங்கள். இ-மெயில் மற்றும் எஸ்.எம்.எஸ்-ல் வரும் லிங்குகளை க்ளிக் செய்யாதீர்கள்.

2. வங்கிகளின் முறையான ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துங்கள்.

3. டெபிட் கார்டைப் பயன்படுத்தும்போது அந்தக் கருவிகளில் வித்தியாசமாக ஏதேனும் பொருத்தப்பட்டுள்ளதா என்பதைக் கவனியுங்கள்.

4. ஆன்லைன் ஆர்டர்களை கூடியமட்டில் கேஷ் ஆன் டெலிவரியாகச் செய்யுங்கள்.

5.  பிரவுசிங் சென்டர்களில் பணப்பரிவர்த்தனை செய்வதைத் தவிருங்கள்.

எஸ்.பி.ஐ வங்கியானது ஆறு லட்சம் வாடிக்கை யாளர்களுக்கு புதிய கார்டு வழங்க முடிவு செய்திருக்கிறது. இந்த 32 லட்சம் கார்டில் உங்கள் கார்டும் இருக்கிறதோ இல்லையோ, உடனே உங்கள் கார்டின் பின்நம்பரை மாற்றுவதே சரி!

Advertisements
%d bloggers like this: