Advertisements

வேர்ட் டிப்ஸ்…கோடுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

கோடுகளைப் புரிந்து கொள்ளுங்கள்

வேர்ட் செயலி பலவகையான அடிக்கோடுகளைப் பயன்படுத்தும் வசதியினை நமக்குத் தருகிறது. இதனை நாம் Font டயலாக் பாக்ஸில் தெரிந்து கொள்ளலாம். இந்த டயலாக் பாக்ஸ் பெற, கண்ட்ரோல் + டி (Ctrl+D) அழுத்த வேண்டும். இவற்றில் காட்டப்படும் பலவகையான அடிக் கோடுகளில் சில முக்கியமானவற்றை இங்கு காணலாம்.
None – தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டில், ஏற்கனவே அடிக்கோடு அமைக்கப்பட்டிருந்தால், அது நீக்கப்படும்.

Single ~ தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் முழுவதும், ஒரே கோடாக அடிக்கோடு இடப்படும்.
Words only ~ தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் முழுவதும் உள்ள சொற்களின் கீழாக மட்டும் அடிக்கோடுகள் இடப்படும். சொற்களுக்கு இடையே உள்ள இடைவெளி, டேப் கீ மூலம் உருவாக்கப்பட்ட இடைவெளிகளில் இந்த கோடு அமைக்கப்பட மாட்டாது.
Double ~ தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் முழுவதும், இரு கோடாக அடிக்கோடு இடப்படும்,
Dots ~ தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட் முழுவதும், ஒரே கோடாக, புள்ளிகளால் அடிக்கோடு இடப்படும்,
Dash ~ இதுவும் Dots போலத்தான். புள்ளிகளுக்குப் பதிலாக சிறிய இடைக்கோடு இடப்படும்.
மேலே காட்டப்பட்டவை சில குறிப்பிட்ட அடிக்கோடுகள் தான். வேர்ட் மொத்தம் 18 வகையான அடிக்கோடுகள் இடும் வசதியைத் தருகிறது.

எழுத்தைச் சுருக்க இரு வழிகள்

எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் எந்த ஒரு பைலிலும் காணப்படும் எழுத்தின் அளவைப் பெரிதாக்கவும் சிறியதாக மாற்றவும் இரண்டுவித கட்டளைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவை Ctrl + Shift + > மற்றும் Ctrl + Shift + < என ஒரு வகை.
Ctrl + [மற்றும் Ctrl + ] என ஒரு வகை. ஏன் இரண்டு விதமான கட்டளைகள்? இதன் செயல்பாட்டில் வேறுபாடு உண்டா? எனக் கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். எழுத்து அளவுக்கான கீழ்விரியும் பட்டியலைப் பார்த்தால் இதற்கான விடை தெரியும். இந்த பட்டியலில் வரிசையாக எழுத்தின் அளவு இருக்காது. 8 லிருந்து 12 வரிசையாக வரும் எண் பின்னர் 14, 16 எனச் செல்லும். அப்படியானால் எழுத்தின் அளவு 13,15 வேண்டும் என்றால் என்ன செய்வது? இங்கே தான் மேலே கூறப்பட்ட இரு வகைக் கட்டளைகள் வேறுபடுகின்றன.
முதலில் தரப்பட்ட மூன்று கீகள் இணைப்பு (Ctrl + Shift + >) எழுத்து அளவு பட்டியலில் உள்ள எண் படி அளவைப் பெருக்கும், குறைக்கும். எடுத்துக் காட்டாக இந்த கட்டளையைப் பயன்படுத்துகையில் 12க்குப் பின் எழுத்தின் அளவு 14 ஆக உயரும். 14ல் இருந்தால் குறைக்கும்போது 12 ஆகக் குறைக்கப்படும். ஆனால் இரண்டாவது வகைக் கட்டளையான இரண்டு கீ (Ctrl + [) கட்டளையைப் பயன்படுத்துகையில் அவை எழுத்தின் அளவை ஒவ்வொன்றாகக் குறைக்கும், கூட்டும்.

Advertisements
%d bloggers like this: