Advertisements

கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும் 6 அம்சங்கள்..!

ம்மை அறியாமல் நாம் செய்யும் பல விஷயங்கள், நமது கடன் வாங்கும் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக் கூடும். இந்தக் கிரெடிட் ஸ்கோர் அதிகமாக இருந்தால், நமக்கு எளிதாகக் கடன் கிடைக்க உதவும்.

 

1. கடனுக்கான மாதத் தவணை கட்டத் தவறினால்,  அபராதம் விதிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால், கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதி நமக்கு இல்லை என சிபில் அறிக்கையில் பதிவாகும் என்பது பலருக்கும் தெரியாது.
 

2. கிரெடிட் கார்டு வாங்கிவிட்டு, அதனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தாலும் கிரெடிட் ஸ்கோர் குறையும். காரணம், ஒருவர் தனக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் தகுதி இல்லை என்பதால்தான், கிரெடிட் கார்டு மூலம் எந்தப் பொருளையும்  வாங்கவில்லை என கடன் தரும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்யும்.

3. அதேபோல், அதிக அளவில் கிரெடிட் கார்டினை  பயன்படுத்தினாலும், ஜாமீன் இல்லாமல் தரப்படும்  பர்சனல் கடன்களை அதிகம் வாங்கினாலும் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் குறையும். காரணம், இதுமாதிரியான கடன்கள் ஒருவரை பெரும் செலவாளி போலக் காட்டிவிடும். 
 

4. கிரெடிட் கார்டு கடன் அல்லது பர்சனல் கடன் வாங்கிவிட்டு, அதனை முழுமையாகச் செலுத்தாமல், வட்டி அல்லது அசல் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் ஒருவரது  கடன் கிரெடிட் ஸ்கோர் குறையும்.

5. பலமுறை கடன் வாங்கினால்தான் ஒருவரது கிரெடிட் ஸ்கோர் குறையும் என்றில்லை. கடனுக்காக பல்வேறு கிரெடிட் கார்டுகள், பான் நம்பர் கொடுத்து விசாரித்திருந்தாலும் ஒருவரது கடன் ஸ்கோர் குறையும். காரணம், அதிகம் கடன் வாங்குபவர்கள் அதிக ரிஸ்க் கொண்டவராகக் கருதப் படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

6. கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கிவிட்டு, அதனைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் (35 முதல் 40 நாள்கள்) கட்ட முடியாமல் கடன் தொகையை மாதத் தவணையாக மாற்றிக் கொண்டாலும் ஒருவரது கடன் புள்ளிகள் குறையும். அதாவது, ஒருவரது கடன் திரும்பச் செலுத்தும் திறன் குறைவாக இருப்பதாக கடன் வழங்கும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்வதுதான். 

Advertisements
%d bloggers like this: