Advertisements

வேர்ட் டிப்ஸ்…வரிகளை ஒழுங்கு படுத்த

வரிகளை ஒழுங்கு படுத்த

டாகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில்,

வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், வேர்ட், வரியில் உள்ள மிகப் பெரிய எழுத்துருவினைக் கண்டறிந்து, அதன் அளவிற்கேற்ப, அதற்கேற்ற வகையில் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அமைக்கிறது. ஒரு வரியில் உள்ள எழுத்துருவுக்கும், அடுத்த வரியில் உள்ள எழுத்துருவிற்கும் அளவில் வித்தியாசம் இருந்தால், வரிகளுக்கிடையேயான இடைவெளி வேறுபாடாக அமைகிறது.
இந்த பிரச்னைக்குத் தீர்வு காண, வரிகளுக்கிடையேயான இடைவெளியைச் சரியாக நாமே அமைக்க வேண்டும். இதற்கு ஒரு வழி உள்ளது. நாம் எந்த அளவில் எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் அளவில் 120 சதவீத அளவில் வரிகளுக்கிடையே இடைவெளி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக டைம்ஸ் ரோமன் எழுத்துருவில் 10 பாய்ண்ட் அளவில் எழுத்துக்களைப் பயன்படுத்தினால், வரிகளுக்கான இடைவெளி 12 பாய்ண்ட்களாக இருக்க வேண்டும்.

திரைக் குறிப்பினை மறைக்க

வேர்டில் மவுஸ் பயன்படுத்துகையில், சிறிய அளவில் மஞ்சள் வண்ணத்தில் சில இடங்களில் கட்டங்கள் எழுவதைப் பார்த்திருப்பீர்கள். உங்கள் மவுஸ் எதனைக் காட்டுகிறது என்பது, சிறிய அளவில் விளக்கும் செய்தி அந்தக் கட்டத்தில் இருக்கும். இவை ஸ்கிரீன் டிப்ஸ் (ScreenTips) என அழைக்கப்படுகின்றன. மாறா நிலையில், இவை எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும். அதாவது நீங்கள் உங்கள் மவுஸைக் கொண்டு செல்கையில், குறிப்பிட்ட இடத்தில் இந்த கட்டச் செய்தி கிடைக்கப்பெறும். ஆனால், ஒரு சிலர், இது எதற்கு? தெரிந்தது தானே, என எரிச்சல் படுவார்கள். அப்படிப்பட்டவர்கள், சில செட்டிங்ஸ் அமைத்தால், இவை காட்டப்படாமல் இருக்கும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் (Word Options) டயலாக் பாக்ஸினைப் பெறவும்.வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டனை அழுத்தினால், கிடைக்கும் கட்டத்தில் கீழாக Word Options கிடைக்கும். உங்களிடம் வேர்ட் 2010 இருந்தால், ரிப்பனில் பைல் டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. திரையின் இடது பக்கத்தில் Advanced என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு ஸ்குரோல் செய்து கீழாகச் சென்றால், Display என்ற பிரிவு கிடைக்கும்.
4. இதில் Show Shortcut Keys in ScreenTips என்ற செக் பாக்ஸில் டிக் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.
5. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

டேபிளில் நெட்டு வரிசை அகலம்

வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட் டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.
5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.
6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.
முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.

Advertisements
%d bloggers like this: