Advertisements

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

தை எப்படி எதிர்கொள்வது? கையில்வைத்திருக்கும் 1,000 மற்றும் 500 ரூபாய்களை என்ன செய்வது, எப்படி மாற்றுவது… என்ற பல்வேறு குழப்பங்களை மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது நவம்பர் 8-ம் தேதி அன்று மோடி செய்த அறிவிப்பு! இதை எப்படிச் சமாளிப்பது? சந்தேகங் களுக்குப் பதில் சொல்கிறார் ஆடிட்டர் சதீஷ்குமார்.

பொதுமக்கள்

நம்மிடம் இருக்கும் பணத்தை நேராக வங்கியில் டெபாசிட் செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. அப்படிச் செய்யவில்லை என்றால், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் தங்கிவிடும். 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்பவர் களுக்கு மட்டுமே, வருமான வரித் துறை கேள்வி எழுப்ப வாய்ப்பு இருக்கிறது என அரசு தற்போது கூறியிருக்கிறது.

வியாபாரிகள்

1 கோடி ரூபாய்க்கு மேல் டர்ன் ஓவர் இருந்தால் கட்டாயமாக ஆடிட்டரிடம், உங்களுடைய கணக்கு வழக்குகளைச் சமர்ப்பிக்க வேண்டும். மொத்தக் கணக்கு வழக்குகளை ஆடிட்டர் சரிபார்த்து கையொப்பம் இட்டிருக்க வேண்டும். நீங்கள் வியாபாரத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்கு நிறையப் பேர் பணம் தர வேண்டி யிருக்கிறது. இப்போது கரன்சி பிரச்னையால் எல்லோரும் பணத்தை எடுத்துக்கொடுத்தால் எந்தவித கவலையும் இல்லாமல், உங்கள் வங்கிக்கணக்கில் அதை டெபாசிட் செய்யலாம். உதாரணத்துக்கு கடந்த 2015 – 16 நிதி ஆண்டில் உங்களுக்கு 10 லட்ச ரூபாய் வர வேண்டியிருக்கிறது. இந்த வருடம் 2016 – 17 நிதி ஆண்டில் 5 லட்ச ரூபாய் வர வேண்டியிருக்கிறது. இப்போது அந்த 15 லட்சம் ரூபாயும் ஒரே நேரத்தில் திருப்பிவந்தால், அதை உங்கள் வங்கிக்கணக்குப் புத்தகத்தில் வரவுவைத்துவிட்டு, 15 லட்சம் ரூபாயையும் டெபாசிட் செய்யலாம். யார், யார், எவ்வளவு பணம் கொடுத் திருக்கிறார்கள் என்ற விவரத்தையும், வரவுப் புத்தகத்தில் குறிப்பிட்டால் போதும்.  இப்படி டெபாசிட் செய்த பின்னர் வருமானவரித் துறையினர் கேள்விகேட்டால், உங்களின் வரவு செலவுக் கணக்கு நோட்டைக் காண்பித்தாலே போதும். 

நிறுவனமோ அல்லது கடையோ மாத டர்ன் ஓவர்  சராசரியாக 5 லட்சமாக இருந்துவருகிறது.  இப்போது திடீரென 5 லட்சத்துக்கு மேல் டர்ன் ஓவர் இருந்தால் வருமானவரித் துறை நிச்சயம் கேள்விகேட்கும்.

கடன் வாங்கியவர் – கொடுத்தவர்

கல்யாணத்துக்கோ, வியா​பாரத்துக்கோ அல்லது இதரச் செலவுகளுக்கோ வங்கியில் பெரும் அளவு தொகை கடனாகப் பெற்றிருந்தால், அதைத் திரும்பவும் வங்கியில் டெபாசிட் செய்யலாம். வரித் துறையினர் கேள்வி எழுப்பும்போது நேரடியாகக் கடன் சம்பந்தப்பட்ட ரசீது​களையும், ரூபாய் பழைய நோட்டுக்களை மாற்ற வங்கியில் டெபாசிட் செய்த ரசீதையும் காண்பித்தால் போதும். இந்த நட​வடிக்கைகள் நகைக் கடனுக்கும் பொருந்தும்.

நண்பர்களுக்கோ, உறவினர்​களுக்கோ கடன் கொடுத்திருக்​கிறீர்கள். அவர்கள் கரன்சி மாற்று வதில் பிரச்னை என்பதால் உங்களிடம் பழைய நோட்டுக்​களைக் கொடுத்து கடனை அடைத்துவிடுகிறார்கள். அந்தத் தொகையை வங்கியில் மொத்தமாக டெபாசிட் செய்​தால், வருமானவரித் துறையினர் கேள்வி எழுப்பு​வார்கள்.

 

பொதுவாக வருமானவரிச் சட்டப்படி ரூ.20,000-க்கு மேல் மனைவி, குழந்தை என்று எந்த ரத்தப்பந்தமாக இருந்தாலும், வங்கியின் வரைவோலை மற்றும் காசோலைகளாகவே கடன்கள் கொடுத்திருக்க வேண்டும். அப்போதுதான் கடன்களைக் கொடுத்ததாக வருமானவரிக் கணக்கில் எடுத்துக்​கொண்டு, உங்களுக்குத் திரும்பவந்த கடன்தொகையை வருமானமாகக் கருத மாட்டார்கள். அப்படி இல்லாத பட்சத்தில், நீங்கள்  கடன்கொடுத்து, திரும்பப் பெற்ற தொகையையே வருமானமாகக் கருதி வருமானவரி கணக்கிடுவார்கள். 

அது மட்டும் இன்றி, நாம் உறவினர் களுக்கும் நண்பர்களுக்கும் ரொக்கமாகக் கடன் வழங்கியிருப்பது வருமானவரித் துறையினருக்குத் தெரியவந்தால், கொடுக்கப்பட்ட கடன் தொகைக்குச் சமமான தொகை அபராதமாக விதிக்கப்படும். எனவே, ஒருவேளை உறவினர்களுக்கு ரொக்கமாகக் கடன் கொடுத்திருந்தால், வருமானவரித் துறையிடம் வாக்குவாதம் செய்யாமல் நேரடியாக வருமானமாகக் கணக்கிட்டு வரியைச் செலுத்திவிடவும்.

சொத்து வாங்கியவர்- விற்றவர்

மிடில் க்ளாஸ் மக்களில் பெரும்பாலானோர் செய்யும் தவறுகளில் மிக முக்கியமானவை, சொத்துக்களை ரொ​க்கத்தில் கொடுத்து வாங்குவது. தங்கம் தொடங்கி வீடுகள், ரியல்எஸ்டேட் சொத்துக்கள் வரை எல்லா​வற்றையும் ரொக்கமாக வாங்குவது வருமானவரிச் சட்டப்படி தவறு. 

20,000 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்கும்போது காசோலை, வரைவோலை யாகத்தான் செலுத்த வேண்டும். அதேபோல் ரூ.20,000 ரூபாய்க்கு மேல் சொத்துக்களை விற்கும்போதும், நம் பணத்தை வங்கி வரைவோலை அல்லது காசோலையாகத்தான் பெற வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தவும் வாங்கவும் எந்தத் தடையும் இல்லை.

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் 95 சதவிகித மக்களுக்கு இந்தச் சட்டங்கள் தெரியாது. காரணம் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5.17 கோடி மக்கள்தான் வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்கிறார்கள்.

2016 – 17 க்கு முன் தங்கம் – ரியல்எஸ்டேட் சொத்துக்களை விற்று கையில் ரொக்கமாக பணத்தை வாங்கியிருக்கிறீர்கள் என்றால், அவற்றை 2016-17ல் இதர வருமானங்கள் எனக் கருதி 30 சதவிகிதம் வருமானவரி விதிக்கப்படும். அதோடு எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும், வருமானவரிச் சட்டப் பிரிவு
234A, 234B, 234C-ன் ஒரு சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.

ஒருவேளை விவரம் தெரிந்தவர்களாக இருந்து, சொத்துக்களை (தங்கம் மற்றும் ரியல்எஸ்டேட்) காசோலை அல்லது வரைவோலையாகப் பெற்றிருந்தால், அவருக்கு நீண்டகால மூலதன ஆதாய வரியாக 20 சதவிகிதம் செலுத்தச் சொல்லி, வருமானவரித் துறையினர் முன்பே அறிவுறுத்தியிருப்பார்கள். ஒருவேளை, எப்படியோ  தப்பித்திருந்தால், இப்போது அந்தப் பணத்தை கணக்கில் காட்டி 20 சதவிகிதம் நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் எந்த நிதி ஆண்டில் சொத்து விற்கப்பட்டதோ, அதற்கு அடுத்த நிதி ஆண்டின் முதல் மாதத்தில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும், வருமான வரி சட்டப் பிரிவு 234A, 234B, 234C-ன் ஒரு சதவிகிதம் வட்டி செலுத்த வேண்டியிருக்கும் (வரித் தொகைக்கு). 

விவசாயிகள்

விவசாய நிலமாக இருந்து, அவர்கள் கிராமத்தில் எந்த ஒரு வங்கியும் இல்லாத நிலையில், நிலத்தை விற்று தொகையை ரொக்கமாகப் பெற்றிருக்கலாம். ஆனால், விவசாய நிலத்துக்கு இருக்கும் பட்டா, மற்றும் சிட்டா போன்றவற்றில் விவசாய நிலம் எனக் குறிப்பிடப்பட்டு, பயிர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது இந்தப் பணத்தைப் பக்கத்து ஊரில் இருக்கும் வங்கிகளில் சென்று செலுத்தலாம். வருமானவரித் துறையினர் கேள்வி எழுப்பினால், வங்கி இல்லாத காரணத்தைக் குறிப்பிட்டு, முறையான வருமான வரித் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். விவசாய நிலங்களுக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.

அனைவருக்கும்

ஒருவேளை உங்கள் வங்கிக்கணக்கில் அதிக பணத்தை டெபாசிட் செய்கிறீர்கள். அதை வருமானவரித் துறை கண்டுபிடித்து, அந்தப் பணம் எங்கு இருந்து வந்தது என்று கேட்கும்போது சரியான விடை அளிக்கவில்லை என்றால், அந்த வருமானம் சட்டத்துக்குப் புறம்பானது எனக் கருதப்படும். கணக்கில் வராத பணத்துக்கு நேரடியாக 30 சதவிகிதம் வரியும், வரித் தொகைக்கு 200 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்படும். நம் கையில் இருக்கும் மொத்த தொகையில் 90 சதவிகிதத்தை வரியாக மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும்.

அதனால் கவனம் தேவை!

Advertisements
%d bloggers like this: