Advertisements

மோடியின் ராஜதந்திரத்தில் சிக்கிய எதிர்க்கட்சிகள்

ரூ.500, 1000 நோட்டுக்கள் வாபஸ் பெற்றதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், இதனால் பிரதமர் மோடி தவறான முடிவை எடுத்து விட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் பிரதமரின் இந்த ராஜதந்திரமான திட்டத்தால் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு, நிலைமை சீராகி, மக்கள் மகிழ்ச்சி அடையும் நிலை ஏற்படும் போது, தற்போது பிரதமரை குற்றம்

சுமத்தும் எதிர்க்கட்சிகளே மக்களிடம் செல்வாக்கை இழக்கும் நிலை ஏற்படும்.கறுப்பு பணத்தை ஒழிக்கும் இந்த போராட்டத்தில், தங்களின் நலனுக்காகவே பிரதமர் மோடி இந்த திட்டத்தை கொண்டு செயல்படுத்தி வருகிறார் என்பதை சாமானிய மக்கள் புரிந்து கொண்டு அவர் பக்கம் நிற்க துவங்கி உள்ளனர். வங்கிகள், ஏடிஎம்.,கள், பழைய நோட்டுக்களை மாற்றுவதில் தற்போதைய சூழ்நிலையில் சிரமங்கள் இருந்தாலும் இன்னும் சில வாரங்களில் இவை சரியாகி விடும் என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. இன்னும் 50 நாட்களில் பணத்தட்டுப்பாடு நீங்க, பொருளாதார தேக்க நிலை சரியாகும் என பிரதமர் மோடி கூறி இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்க நிலை சீராகி, இயல்பு நிலை திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.நிபுணர்களின் இந்த கருத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பிரதமரின் இந்த தவறான முடிவால் ஏழை மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது ஏழை மக்களின் ரத்தத்தை உருஞ்சும் செயல் என கடுமையாக விமர்சித்து வருவதுடன், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி பார்லி., கூட்டத்தொடரையும் முடக்கி வருகின்றனர். கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான பிரதமரின் இந்த திட்டம் நீண்ட காலம் பயன்தரக்கூடியது என்பதை உணராத எதிர்க்கட்சிகள், இதனை குறுகிய கண்நோட்டத்துடன் பார்த்து வருகின்றன.மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் படிப்படியாக குறைய துவங்கும். பண தட்டுப்பாடு நீங்கும் நிலையில், தற்போது முடங்கி உள்ள சிறுதொழில்கள் மீண்டும் செயல்பட துவங்கும். ஏடிஎம் மற்றும் வங்கிகளில் கூட்டமும் குறைய துவங்கும். அந்த நிலை வரும் போது, தற்போது பிரதமரை குறை கூறி வரும் எதிர்க்கட்சிகள் மக்களிடம் செல்வாக்கை இழந்து, சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிலை உருவாகும்.தற்போது பண தட்டுப்பாடு உள்ளிட்ட சிரமங்களை மக்கள் சந்தித்தாலும், தங்கள் நிலையில் இருந்து பின்வாங்காமல் பிரதமரின் பக்கம் நின்று, ஆர்வத்துடன் வந்து பழைய நோட்டுக்களை மாற்றிச் செல்கின்றனர். பிரதமரின் இந்த திட்டத்தை மனதார வரவேற்று, பாராட்டுகின்றனர்.பிரதமரின் அறிவிப்பிற்கு பிறகு, அதுபற்றி நாடு முழுவதும் 10,000 பேரிடம் கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். துவக்கத்தில் இதனை எதிர்த்த பலரும் கூட, இப்போது ஆதரவு தெரித்து வருகின்றனர். உ.பி., ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட 13 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள், எவ்வித குறையும் கூறாமல் பிரதமரின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவா, உத்திரகாண்ட், ஒடிசா போன்ற மாநிலங்களில் உள்ள 25 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனை ஆதரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.தனது ஜப்பான் பயணத்திற்கு முன் அமைச்சரவை சகாக்கள், கட்சி உறுப்பினர்கள் ஆகியோரிடம் பேசிய மோடி, எதிர்க்கட்சிகள் என்ன கூறினாலும் அதைப் பற்றி கவலைப்படாதீர்கள், மக்கள் நம்முடன் இருக்கிறார்கள் என கூறி இருந்தார். அந்த நம்பிக்கை இன்று உண்மையாகி வருகிறது. இப்போது பிரச்னை எதிர்க்கட்சிகள் பக்கம் தான் திரும்ப துவங்கி உள்ளது. ஏனெனில் இந்த திட்டத்திற்கு பா.ஜ., மட்டுமின்றி பீகார் முதல்வர், ஒடிசா முதல்வர் உள்ளிட்டோர் கட்சி பாகுபாடுகளை மறந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisements

2 responses

  1. மோடியின் இத்திட்டம் ஒரு ஏமாற்று திட்டம்.ஏற்கனவே இதனை பற்றி எல்லா பணக்காரகளுக்கும்,முதலாளிகளுக்கும் தெரிவித்து விட்டு அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து விட்டு பிஜேபி கட்சி கூட கோடி கணக்கில் ஏற்கனவே கருப்பு பணத்தை வெள்ளையாக்கி பின்னர் அமுல்படுத்தி இருக்கிறார்கள். புலனாய்வு, வருமான வரித்துறை,அமலாக்க பிரிவு போன்ற அனைத்து துறை அதிகாரிகளுக்கும் கருப்பு பணம் வைத்திருப்பது யார் என்று தெரியும்? அவர்களை வைத்தே அனைவரையும் பிடித்து விடலாம்,பணத்தையும் கைப்பற்றி விடலாம். வெளிநாடுகளில் முறை கேடாக பணம் வைத்திருப்பதையும் கண்டு பிடித்து விடலாம். தமிழ்நாட்டின், மத்திய அரசாங்கத்தில் இருந்த, இருக்கும் முக்கிய அரசியல்வாதிகள் அனைவருமே வெளிநாடுகளில் பதுக்கி வைத்து இருக்கின்றனர், அதனை பிடிக்காமல் இதனை செயவது ஒரு ஏமாற்று வேலை என்பதில்லாமல் வேறு என்ன ?

  2. மோடியின் இத்திட்டத்தால் பயன் அடைய போகிறவர்கள் மீண்டும் மல்லையாஹ் போன்றவர்கள் தான். மக்களின் வெள்ளை பணத்தை வாங்கி பின் அதனை அதானி,அம்பானி போன்றோருக்கும் தாரை வார்க்கும் செயலை செய்ய போகிறார் மோடி. அரசு வங்கிகளிடம் ஏறத்தாழ 1 ,25 ,௦௦௦ கோடி கடன் வாங்கி இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மற்றவர்கள் வாங்கிய கடன் வசூலிக்கும் உரிமையை கொடுத்திருப்பதிலிருந்தே தெரிகிறது மோடியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை போல கீழ்த்தரமான நாடக அரசியல் செய்பவர் தான் என்று. கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பத்திரமாக அதனை பதுக்கி வைத்துள்ளனர்.தற்போது அவதிப்படுபவர்கள் சாதாரண பொதுமக்கள் தான். வெளி நாடுகளில் பதுக்கி இருப்பவர்களின் விமானத்தில் தான் மோடியே பயணம் செய்கிறார். அரசு வங்கிகளில் பணம் வாங்கி ஏமாற்றுபவர்களை (கோடிக்கணக்கில் ) விட்டு விடுகின்றனர். சாதாரண பொதுமக்கள் வாங்கி இருக்கும் லட்ச ரூபாய்க்காக போலீஸ் மற்றும் அடி ஆட்கள் கொண்டு மிரட்டி தற்கொலைக்கு தூண்டுகின்றனர். மல்லையாஹ், அதானி, அம்பானி,ஜிந்தால் போன்ற முதலைகளை பிடித்தாலே ௮ லட்சம் கோடி வரை வாங்கி கடன் திரும்ப கிடைக்கும். ஆனால் மோடியோ கடந்த ஆஸ்திரேலியா பயணத்தின் போது கவுதம்அதானி யின் விமானத்தில் தான் அங்கு சென்றார். பின் எப்படி கருப்பு பணம் கிடைக்கும் ? மேலும் ஆஸ்திரேலியாவில் அனைத்து நிலக்கரி சுரங்க தொழில் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஆனால் மோடியின் ஆதரவால், அதானி குழுமம் SBI – யில் கடன் வாங்கி அங்கு நிலக்கரி சுரங்க தொழில் ஈடுபட போகிறது. அது நஷ்டம் என்றல் அதன் பலனை அனுபவிக்க போகிறது இதே பொது மக்கள் தான்.வழக்கம் போல வங்கிகள் வராக்கடன் என்று எழுதி ஏமாற்ற போகிறார்கள்.

%d bloggers like this: