Advertisements

ஆபீஸ் 2007 தொகுப்பிற்கு மைக்ரோசாப்ட் உதவாது

இன்றும் பெரும்பாலான கம்ப்யூட்டர்களில், எம்.எஸ்.ஆபீஸ் 2007 தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதனைப் பார்க்கலாம். இந்த தொகுப்பிற்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனம், தீர்வுகளை பேட்ச் பைல்கள் மூலம் கொடுத்து வந்தது. இந்த உதவி வரும் அக்டோபர் 2017க்குப் பின்னர் தரப்பட மாட்டாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பொதுவாக தன் சாப்ட்வேர் தொகுப்புகளுக்கு Microsoft Lifecycle Policy என்ற ஒன்றை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடைப்பிடிக்கும். குறிப்பிட்ட ஆண்டு காலத்திற்குப் பின்னர், அந்த தொகுப்புகளுக்கான உதவிடும் பைல்களை வழங்காது. ஐந்து ஆண்டுகளுக்கு இலவசமாக பேட்ச் பைல்கள் வழங்கப்படும். பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த உதவி நீட்டிக்கப்பட்டு, சில வகை உதவிகள் மட்டுமே தரப்படும்.
தற்போது எம்.எஸ். ஆபீஸ் 2007 தொகுப்பிற்கு அது போன்ற எந்தவித நீட்டிப்பு கால உதவியும் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தன்னுடைய Office 365 தொகுப்பிற்கு, வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் மாறிவிட்டதால், உதவி நீட்டிக்கும் அவசியம் ஏற்படவில்லை என்றும் மைக்ரோசாப்ட் கருத்து தெரிவித்துள்ளது.

Advertisements
%d bloggers like this: