Monthly Archives: திசெம்பர், 2016

நாளை முதல் ஏ.டி.எம்.,ல் ரூ.4,500 எடுக்கலாம்!

துடில்லி : நாளை முதல் (ஜனவரி 1) ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

உச்சவரம்பு:

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, நவ., 8ல் அறிவிக்கப்பட்டது; அப்போது, வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு, டிச., 30 வரையிலான, 50 நாட்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. வங்கிகளில் இருந்து, வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாயும்; ஏ.டி.எம்.,களிலிருந்து, ஒரு நாளில், அதிகபட்சம், 2,500 ரூபாயும் எடுக்கலாம் என, அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு அறிவித்திருந்த, 50 நாட்கள் கெடு நேற்றுடன்(டிச.,30) முடிவடைந்தது.

ரூ4,500 ஆக உயர்வு:

இந்நிலையில் ஜனவரி 1ம் தேதி (நாளை) முதல் ஏ.டி.எம்.,களில் ரூ.4,500 எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ரூ.2,500 ஆக இருந்த வரம்பு ரூ.4,500 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் வாரத்துக்கு அதிகபட்சம், 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம் என்று விதிக்கப்பட்ட வரம்பு தளர்த்தப்படவில்லை.

‘செல்லாக்காசு’… விரிசல் விழுந்த ம.ந.கூ.-விகடன்

.தி.மு.க., தனது புதிய தலைமையைத் தேர்வு செய்துள்ளது. தி.மு.க தனது தலைமையை உறுதிசெய்கிற முடிவில் இருக்கிறது. இத்தகைய அரசியல் சூழலில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க விலகுவதாக, அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோ வெளியிட்ட அறிவிப்பு, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வைகோ விலகலுக்கு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ நடவடிக்கை தொடர்பான கருத்துவேறுபாடுதான் காரணம் என்று சொல்லப்பட்டாலும், உண்மையான காரணங்கள் வேறு!

Continue reading →

மிஸ்டர் கழுகு: “சின்னம்மா அப்ரூவர் ஆகியிருந்தால்… அம்மா இருந்திருக்க மாட்டார்!”

சிபாரதம் ஆரம்பம்!”
அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இருந்து கழுகார் அனுப்பிய தலைப்பு இதுதான். அடுத்த சில மணி நேரத்தில் அலுவலகத்தில் லேண்ட் ஆனார் கழுகார்.

Continue reading →

அட்ரினல்… அற்புத சுரப்பி!

கவும் சிக்கலான தருணம்… இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பிக்கிறது, கையில் வியர்க்கிறது. தப்பிக்க ஏதேனும் வழி உள்ளதா என்று கண்கள் அங்கும் இங்கும் பார்க்கின்றன. அந்தப் பிரச்னையில் இருந்து தப்பிக்க அல்லது பிரச்னையை எதிர்கொள்ள உடலும் மனதும் தயாராகின்றன. இந்த அத்தனை செயல்பாடுகளும் மிகச் சில

Continue reading →

குழந்தைகளுக்கான இணைய தளம்

இன்றைய கால கட்டத்தில், குழந்தைகளை ஸ்மார்ட் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்களிலிருந்து விலக்கி வைக்க முடியவில்லை. பெற்றோர்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகையில், குழந்தைகள், ஒன்று அல்லது ஒன்றரை வயது முதல், போன்களில் தோன்றும் வண்ணக் கோலங்களினால்

Continue reading →

‘குழந்தைகளுக்கு வேண்டாம்!’ கோலா விளம்பரத்திலேயே அதிர்ச்சி வாசகம்

 

பிரியாணி, பீட்சா, சாண்ட்விச் என எந்த உணவாக இருந்தாலும் ‘காம்போ பேக்’ எனும் ஆஃபரில் உடன் ஒட்டிக்கொள்வதில், குளிர்பானங்களுக்கே முதல் இடம். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால் வெல்கம் டிரிங்க்காக இடம் பெறுகின்றன, இந்த கோலா பானங்கள். டி.வி, இன்டர்நெட், செய்தித்தாள், ஃப்ளெக்ஸ் பேனர்கள்… என எங்கெங்கும் கோலாகலமாக கோலா மயம். இப்போதேல்லாம், மேல்நாட்டு கலாசாரம் உள்ள உணவகங்களில், எந்த உணவு வாங்கினாலும், அதனுடன் சேர்த்து கோலாவையும் தருகின்றனர். குடிக்க தண்ணீருக்கு பதிலாக கூல்டிரிங்க்ஸ்தான் என மறைமுகமாகச் சொல்கின்றனர்.

Continue reading →

2017 – ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

நிகழும் துன்முகி வருடம் மார்கழி மாதம் 17-ம் தேதி வளர்பிறை திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, கன்னி லக்னம் சித்தயோகம் கூடிய நாளில் இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எண்

Continue reading →

ஹார்ட் அட்டாக் vs கார்டியாக் அரெஸ்ட்

ஹார்ட் அட்டாக்

உலகம் முழுவதும் அதிகம் பேர் மரணிப்பது இதய நோய்கள் காரணமாகத்தான். அதிலும் மாரடைப்பு வந்து இறப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சமீபத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கூட ‘கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டது. அவரது மரணத்துக்கு அதுவே காரணமாக மாறிவிட்டது. ஆனால், பலரும் கார்டியாக் அரெஸ்டை, மாரடைப்பு என்றே தவறாக நினைத்துக்கொள்கின்றனர். மாரடைப்புக்கும், கார்டியாக் அர்ரெஸ்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

மாரடைப்பு

Continue reading →

விண்டோஸ் டிபண்டர் இயக்க நிறுத்தம்

இரு இதழ்களுக்கு முன்னால், மைக்ரோசாப்ட் தன் இயக்க முறைமையுடன் தரும் விண்டோஸ் டிபண்டர் என்னும் செயலி, அறிமுகமானது முதல் இன்று வரை எப்படி செயல்படுகிறது என்ற கட்டுரை தரப்பட்டது. எப்படி விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 10 இயக்க முறைமைகளில், இந்த செயலி, இயக்க முறையிலேயே இணைந்ததாகத் தரப்பட்டு இயக்கப்படுகிறது என்பதுவும்

Continue reading →

சுயதொழிலுக்கு வங்கி கடனுதவி பெறுவது எப்படி?

புதிதாக சுயதொழில் தொடங்க நினைப்பவர்களுக்குக் கிடைக்கும் வங்கிக் கடனுதவி, மானியம் பற்றிய தகவல்களைக் கூறுகிறார் சென்னை எம்.எஸ்.எம்.இ (MSME- Ministry of Micro, Small & Medium Enterprises) வளர்ச்சி மையத்தின் உதவி இயக்குநரான புனிதவதி.

Continue reading →