Advertisements

6 பலன்கள் தரும் என் சுவாசக் காற்றே!

ழ்ந்து சுவாசப் பயிற்சி செய்து பாருங்கள்… சுவாசத்தை கவனித்து கட்டுப்படுத்தினோம் என்றால், அது உடலில் பல பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.

*தியானத்தில் ஈடுபடும்போது, மூச்சைக் கட்டுப்படுத்தி வெளியேற்றுகிறோம். அதனால் மூளையின் இயக்கம் சீராகும். அதோடு, மூளை செரிப்ரத்தின் (Cerebrum) மேல் பகுதியான கார்டெக்ஸின் (cortex) அடர்த்தி அதிகரிப்பதால், மூளையின் அளவு அதிகரிக்கும் என்கிறது ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வு.

*இதயத்துடிப்பு விகிதம் மிக அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் மாரடைப்பு ஏற்படும். தினசரி அதிகாலை மூச்சுப் பயிற்சி செய்வதால் இதயத்துடிப்பு சீராகும்.

*பிரச்னையில் இருந்து தப்பி ஓடு அல்லது எதிர்கொள் என்ற சூழல்தான் மனஅழுத்தம் ஏற்பட காரணம். அந்த சூழலில், இரண்டு நிமிடங்களுக்கு ‘மூச்சில் கவனம்’ செலுத்தும்போது மனம் அமைதி அடையும். மத்திய நரம்பு மண்டலம் தூண்டப்படும். இதனால் மனஅழுத்தம் குறையும். மனம் ரிலாக்ஸ் ஆகி, பிரச்னைகளை எதிர்கொள்ளத் தயாராகும்.

*அதீத கோபம் அல்லது பயம் ஏற்படும்போது, தன்னிச்சையாக வேகமாக மூச்சு வாங்குவதை உணர்ந்திருப்போம். அபாயத்தை எதிர்கொள்ள இயற்கையாகவே உடல் கொடுத்திருக்கும் பாதுகாப்பு கவசம் இது. அப்போது நிதானமாக மூச்சை இழுத்து விடுவதால் படபடப்பு குறையும். உதாரணமாக, மேடைக்குச் செல்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக மூச்சுப் பயிற்சி செய்தால் பயம், படபடப்பு ஆகியவை குறையும்.

*பள்ளி, கல்லூரி தேர்வுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன், சில நிமிடங்கள் மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. இதனால் மனம் ஒருமுகப்படும். நினைவுத்திறன் அதிகரிக்கும்.

*மூச்சுப் பயிற்சி, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியின் மரபணுக்களில் சில மாற்றங்களைச் செய்கிறது. இதனால் குற்ற உணர்ச்சி, தாழ்வு மனப்பான்மை, விரக்தி, தற்கொலை எண்ணம் உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, மனம் புத்துணர்ச்சி பெறும்.

Advertisements
%d bloggers like this: