Advertisements

முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற பிரார்த்திப்போம்!

Advertisement

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தங்கள் தலைவி பூரண நலத்துடன் மீண்டு வந்து, இரட்டை விரல் உயர்த்தி, கைகளை ஆட்டிப் புன்னகையுடன் தரிசனம் தருவார் என்ற நம்பிக்கையுடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை, பரிதவிப்போடும் பதற்றத்தோடும் மருத்துவமனை வாசலில் காத்துக் கிடக்கிறார்கள்.

நோயுடன் போராடுவது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஓர் அத்தியாயம். ஆனால், கலைத்துறையில் மட்டுமின்றி அரசியல் அரங்கிலும் வெற்றிகரமான ஒரு தலைவியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஜெயலலிதா அனுதினம் எதிர்கொண்ட போராட்டங்கள்… அதைக் காட்டிலும் வலியும் வேதனையும் மிகுந்தவை. வெற்றிகரமான சினிமா நடிகையாக, மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவராக, மதியூகம் நிறைந்த கட்சித் தலைவராக, தமிழகத்தின் கம்பீர முதல்வராக, இந்திய அரசியல் அரங்கில் மதிப்பான ஆளுமையாக என ஒவ்வொரு காலகட்டத்திலும் தன்னைத் தகவமைத்துக் கொண்டே வந்திருக்கிறார் ஜெயலலிதா.

அவர் பூரண உடல்நலம் பெற்று முன்னைவிட உற்சாகத்தோடும் முழு ஆரோக்கியத்தோடும் செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். நல் உள்ளங்களின் வேண்டுதல்கள் பலனளிக்கும் என்பது நன்நம்பிக்கை.

அந்த நம்பிக்கையுடன், முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண நலம் பெற வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

Advertisements

One response

  1. Yes….I am not an AIDMK MEMBER….but I pray for her speedy recovery…..lakhs and lakhs of people’s prayer never goes in vain….

%d bloggers like this: