Advertisements

ஸ்ட்ரெஸ்… உங்களால் சமாளிக்க முடியும்!

ச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை…  உலகம் முழுக்க மனஅழுத்தம் தரும் பிரச்னைகள் நிரம்பியிருக்கின்றன. உடல்நலம், மனநலம், வேலை, உறவுகள் போன்றவை மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றன. வெவ்வேறு காரணங்களால் மனஅழுத்தம் ஏற்படுவதால், அதற்கு ஒன் ஸ்டெப் தீர்வு என்று எதுவும் இல்லை. ஆனால் இதை எதிர்கொள்ள, சமாளிக்க நிறைய வழிகள் இருக்கின்றன.

காரணம்… தொழில்நுட்பம்

ட்விட்டர், ஃபேஸ்புக், போன் கால், வாட்ஸ்அப் தகவல்கள் தொடர்ந்து வருவதால், மனஅழுத்தம் ஏற்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு. ஃபேஸ்புக்கில் புதிய அப்டேட்களை போஸ்ட் செய்வது, நட்பு வட்டத்தில் இணைவதற்கு கொடுத்த அழைப்பு  ரிஜெக்ட் ஆவது போன்றவை மனஅழுத்தம் ஏற்படுத்துகிறதாம். இவ்வளவு ஏன்… அப்டேட்டுக்கு ‘லைக்’ விழவில்லை என்றாலும், எத்தனை ‘லைக்ஸ்’ வாங்கியிருக்கிறோம் என்பதிலும்கூட ஸ்ட்ரெஸ். தொழில்நுட்பம் பலரது மனஅழுத்தத்துக்குக் காரணமாகிவிட்டது.

வேலை

குறைவான செயல்திறன், டார்கெட், விடுப்பு கிடைக்காமை, வேலைப்பளு போன்ற காரணங்களாலும் மனஅழுத்தம் ஏற்படுகிறது.

பொருளாதாரம்

வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, தேவைக்கு அதிகமாக கிரெடிட் கார்டில் வாங்கிவிட்டு, பணம் செலுத்த முடியாமை, பண நெருக்கடி ஆகியவை மனஉளைச்சலை ஏற்படுத்துகின்றன.

உறவுகள்

மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், ஏதோ ஒரு டென்ஷனால் வீட்டில் இருப்பவரின் மீது கோபத்தைக் காண்பித்தால், அது அப்படியே அவருக்கும் தொற்றிக்கொள்ளும். பிறகு, அது குழந்தைகளைக்கூட பாதிக்கக்கூடும். உறவுகள் சிதைந்துபோகும்.

ஸ்ட்ரெஸ்ஸுக்கு ஆளானவர்

கவனச் சிதறல்கள்

உயர் ரத்தஅழுத்தம்

வயிற்றுப் பிரச்னைகள்

அதிகமான குழப்பம்

உடல் எடை அதிகரித்தல்

பாலியல் உறவில் ஆர்வம் குறைதல்

என்ன செய்யலாம்?

ஒழுங்கு செய்

மன அழுத்தம் ஏற்படுகிறது என்று தெரிந்ததுமே அதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். தொடக்கத்திலேயே மனஅழுத்தத்தை திட்டமிட்டு வீழ்த்திவிட்டால், நீங்கள்தான் வெற்றியாளர். நம் இருக்கும் பகுதியை சுத்தம் செய்வதுபோல, மனதையும் சுத்தம் செய்வதன் மூலம் மனஅழுத்தம் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி

ஓர் ஆய்வில், உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் 48 சதவிகிதத்தினர் ஸ்ட்ரெஸ்ஸை விரட்டி அடித்துள்ளனர். எனவே, உங்களுக்கென அரை மணி நேரத்தை ஒதுக்குங்கள்.

`நோ’ சொல்வோம்

தேவையான நேரத்தில், ‘நோ’ சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள். கையில் பெரிய வேலையை வைத்துக்கொண்டு, அடுத்த வேலையை ஏற்காதீர்கள். இந்தச் செயல் எந்த வேலையையும் சரியாக செய்யவிடாமல் உங்களைத் தடுத்துவிடும்.

‘எனக்கான நேரம்’ அட்டவணை

உங்களுக்கென நேரம் ஒதுக்குங்கள். 10 நிமிடம் தியானம், ஞாயிறு நீண்ட குளியல், இசையில் மூழ்குவது, வாசிப்பது போன்ற ‘எனக்கான நேரம்’ அட்டவணையைத் தயார் செய்யுங்கள்.

ஸ்ட்ரெஸ் இல்லாதவர்

சரியான கவனம்

தெளிவான சிந்தனை

நிறைவான தூக்கம்

நல்ல மனநிலை

வேலையில் கில்லி

அளவாகச் சாப்பிடுதல்

சரியான எதிர்ப்புச் சக்தி

எனர்ஜெடிக்

Advertisements
%d bloggers like this: