Advertisements

போயஸ் கார்டன் இல்லத்தை விட்டு வெளியேறுகிறார் சசிகலா?!விகடன்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் தான் வசித்த  போயஸ் கார்டன் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறாராம் சசிகலா. 

கடந்த 5-ம்  தேதி இரவு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் காலமானார். மறைந்த முதல்வருக்கு அஞ்சலி செலுத்த  மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது சமாதி மற்றும்  அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, கட்சியை வழிநடத்தும் அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. எதிர்பாரா திருப்பமாக கட்சியின் மூத்த நிர்வாகிகள், சசிகலா பொதுச் செயலாளராக ஆதரவு தெரிவித்தாலும்,  சசிகலாவுக்கு ஆதரவாக, போஸ்டர்கள், ஃபிளக்ஸ்கள் என அதிமுகவினர் அதகளம் செய்தாலும், பொதுமக்கள் மனதில் சசிகலாவுக்கு அந்த ஆதரவு இருக்கிறதா என்பது கேள்விக்குறியே. எம்.ஜி.ஆர் அமைத்த கட்சி விதிகளின்படி சசிகலா உடனடியாக அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்நிலையில், மக்கள் ஆதரவைப் பெற சசிகலா தரப்பினரும் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர். 

போயஸ் கார்டனுக்கு வரும் பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார் சசிகலா. கட்சித் தொண்டர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பு எழாமல் பொறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டுமென்பது சசிகலா தரப்பினரின் எண்ணமாக இருக்கிறது. இது போக கட்சியினரைக் கவர, சசிகலா மீது இருக்கும் அதிருப்தியைக் களைய சென்ட்டிமென்ட் வியூகம் ஒன்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாம். ஜெயலலிதாவின் சொத்துப் பங்கீட்டு சிக்கல் அளிக்கிறது  போயஸ் கார்டன் இல்லம்.  அதனால், இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, அம்மா நினைவகம் என பெயர் மாற்றி அவரது நினைவிடமாக மாற்றவிருக்கிறார்களாம். இதில் ஏதேனும் சட்ட சிக்கல் வருமா என்பது பற்றியும் ஆலோசித்து வருகிறார்களாம். எல்லாம் எதிர்பார்த்தபடி நடந்தால், விரைவில் அறிவிப்பு வரலாம் என்கிறது கார்டன் வட்டாரம்!

Advertisements
%d bloggers like this: