Advertisements

உங்கள் சொல்பேச்சு கேட்கும் டிஜிட்டல் அசிஸ்டன்ட்கள்!

ஸ்மார்ட் போன்கள் வைத்துள்ள நாம் ஒவ்வொருவரும் நமது பாக்கெட்டில் ஒரு ஸ்மார்ட் அசிஸ்டன்டை வைத்திருக்கிறோம்  எனில் ஆச்சர்யமாக இல்லை? நமது குரல் மூலமாகவே நமது

கேட்ஜெட்களைக் கையாள உதவியாக இருக்கின்றன இந்த ஸ்மார்ட் அசிஸ்டன்ட்கள். ஆண்ட்ராய்டு போன்களில் கூகுள் நவ், ஆப்பிள் போன்களில் சிறிய மற்றும் விண்டோஸ் போன்களுக்கு கொர்டானா என நம் அனைவருடைய போன்களிலும் ஏதேனும் ஒரு வாய்ஸ் அசிஸ்டன்ட் இருக்கும். இந்த  அசிஸ்டன்ட்களிடம் என்ன வேலை எல்லாம் செய்யச் சொல்லலாம் தெரியுமா?

 

* வானிலை நிலவரம் : அன்றைய தினத்தில் வெளியே என்ன வெப்பநிலை என்பதனை இந்த அசிஸ்டன்ட்களிடம் கேட்கலாம். உங்கள் ஊரில் மழை வருமா, வராதா என்பது போன்ற கேள்விகளையும் தாராளமாகக் கேட்கலாம்.

* போனை இயக்கலாம் : இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் மூலம் உங்கள் போன்களின் செயல்பாடுகளை இயக்க முடியும். உதாரணமாக, உங்கள் போனின் மியூசிக் ப்ளேயரை திறக்க, ப்ளூடூத், வைஃபை போன்றவற்றை ஆன் செய்யக்கூட முடியும். உங்கள் போன் புக்கில் இருக்கும் ஒரு நபரின் பெயரைத் தேடி, அவருக்கு கால் செய்யவும் முடியும்.

*
அலாரம் செட் செய்யலாம் : விரும்பும் நேரத்துக்கு அலாரம் செட் செய்ய இதனைப் பயன்படுத்தலாம். சரியான நேரத்தை குறிப்பிட்டு, அலாரம் வைப்பதற்கான கமாண்ட் கொடுத்தால் அலாரம் செட் ஆகிவடும். அந்த நேரத்தை மாற்றவும், வைத்த அலாரத்தை நீக்கவும் முடியும்.

* இசையோடு விளையாடு : உங்கள் மியூசிக் ப்ளேயரை ஆன் செய்வதோடு மட்டும் இல்லாமல் முழுமையாக வாய்ஸ் அசிஸ்டென்ட்கள் மூலமாக அவற்றை இயக்க முடியும். நீங்கள் விரும்பும் பாடலைத் தேட, ஓடும் பாடலை நிறுத்த மற்றும் அடுத்த பாடலுக்கு மாறுவது போன்ற கட்டளைகளை உங்கள் குரலிலேயே தரலாம்.

* மேப்ஸ் : நீங்கள் டிரைவிங் செய்யும்போது வழிகளைக் கண்டறிய டைப் செய்வது கடினம். அந்த நேரத்தில் இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் மூலம் எளிதாக மேப் சேவையைப் பயன்படுத்த முடியும்.

இவற்றோடு இன்னும் பல விஷயங்களை இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட்கள் மூலம் இயக்கலாம்.

Advertisements

One response

  1. உங்களுக்கு நன் றி

%d bloggers like this: