Advertisements

எக்ஸெல் டிப்ஸ்..சார்ட்களை நீக்குதல்

சார்ட்களை நீக்குதல்
எக்ஸெல் புரோகிராம், ஓர் ஒர்க் ஷீட் டேபிளின் அடிப்படையில் பலவகையான சார்ட்களை உருவாக்க அனுமதிக்கிறது. இவை அந்த ஒர்க் ஷீட்களில் இருக்கலாம்; அல்லது அவற்றை முழுமையான ஒர்க் ஷீட் ஒன்றில் பதித்து வைக்கலாம். பின்னர், சில வேளைகளில்,

குறிபிட்ட ஒரு சார்ட்டினை நீக்க வேண்டியதிருக்கும். ஒர்க் ஷீட்டில் பதிந்து வைக்கப்பட்ட (embedded) சார்ட்டினைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், சார்ட்டைச் சுற்றிலும் ஹேண்டில் அடையாளம் காட்டப்படும். உடன் Delelte கீயை அழுத்த வேண்டும். சார்ட் நீக்கப்படும்.
சார்ட் ஷீட் ஒன்றை நீக்க வேண்டும் எனில், முழுமையான ஒர்க் ஷீட் ஒன்றை எப்படி நீக்குவீர்களோ, அதே போல நீக்கலாம்.
1. சார்ட் ஷீட்டைத் திறக்கவும்.
2. ரிப்பனில், ஹோம் டேப் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
3. Cells குரூப்பில், டெலீட் அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில் Delete Sheet என்பதில் கிளிக் செய்திடவும்.
4. தொடர்ந்து ஓகே கிளிக் செய்திடவும். சார்ட் ஷீட் நீக்கப்படும்.
மாற்று வழி ஒன்றும் உள்ளது. குறிப்பிட்ட ஷீட்டிற்கான டேப்பினைக் கண்டறியவும். அதில் ரைட் கிளிக் செய்திடவும். அப்போது காண்டெக்ஸ்ட் மெனு ஒன்று கிடைக்கும். அதில் Delete என்பதைக் கிளிக் செய்திடவும்.
ஒர்க் புக்கின் முன் தோற்றம்
எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம். இதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இட து பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ள படி செட் செய்திடவும்.
1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க் ஷீட் மேலாக, சுருக்கமாக properties காட்டும்.
2. அடுத்து Document Properties ஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.
3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.
6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.
டேட்டாவிற்கேற்ற பார்மட்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.
ஆனால், பலர், இதனால் நேரம் அதிகமாகிறது என்று எண்ணுகின்றனர். நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே, எக்ஸெல் சில ஷார்ட் கட் கீகளைத் தருகிறது. அவற்றை கீழே காணலாம்.
Ctrl+Shift+~ பொதுவான பார்மட்
Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+#தேதி அமைப்ப தற்கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm)அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.

Advertisements
%d bloggers like this: