Advertisements

வேர்ட் டிப்ஸ்..தானாக எண்கள் அமைவதை நிறுத்த

தானாக எண்கள் அமைவதை நிறுத்த
வேர்டில் தரப்பட்டுள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவெனில், சில பார்மட் வகைகளை அதுவே தானாக இயக்கி, செயல்படுத்திப் பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும். இதில் ஒன்று தான், வேர்ட் தானாக எண்களை நம் கூற்றுகளுக்கு இட்டுத் தருவது. நாம், எண்களுடன் அமைந்த வாக்கியங்களை அமைக்கையில், வேர்ட் இதனைப் புரிந்து கொண்டு, சற்று தள்ளி, இடைவெளி (indent) அமைத்து, எண்களை தானாகவே வரிசையாக அமைக்கிறது.

ஓர் எண்ணையோ அல்லது எழுத்தையோ அமைத்து உடன் முற்றுப் புள்ளி வைத்து ஸ்பேஸ் பாரைத் தட்டினால், வேர்ட் நாம் எண்களுடன் வாக்கியங்கள் அமைக்க விரும்புகிறோம் என்று எடுத்துக் கொண்டு, எண்களைத் தானாக அமைக்கிறது. குறிப்பிட்ட பத்தி எண்களுடன் அமைக்கப்பட நீங்கள் விரும்பவில்லையானால், தானாக எண் அமைக்கப்பட்டவுடனேயே, Ctrl+Z கீகளை அழுத்தவும். எண் நீக்கப்படும். ஆனால், இந்த தானாக எண்கள் அமைக்கும் வேலையை முற்றிலுமாக நிறுத்த கீழ்க்கண்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பின்னர், Word Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதன் இடது பக்கத்தில், Proofing என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பின்னர், AutoCorrect பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் ஆட்டோ கரெக்ட் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இதில் AutoFormat As You Type என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் உள்ளதை உறுதி செய்திடவும்.
5. இங்கு காணப்படும் Automatic Numbered Lists என்பதற்கு அருகே உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும்.
6. தொடர்ந்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இதன் மூலம், தானாக எண்கள் அமைக்கும் செயலியைச் செயல்படுவதிலிருந்து நிறுத்துகிறோம்.
மொத்த பக்க எண்ணிக்கை
வேர்டில் டாகுமெண்ட் தயாரிக்கும்போது, பக்கங்களின் எண்ணிக்கையை அமைப்பது நம் அனைவரின் வழக்கம். அந்த டாகுமெண்டில் மொத்தம் எத்தனை பக்கங்கள் என்பதனையும் அதனுடன் இணைத்து, ஒவ்வொரு பக்கத்திலும் வருமாறு அமைக்கலாம். இதனை டாகுமெண்டில் பீல்ட் ஒன்றை அமைப்பதன் மூலம் கொண்டு வரலாம். இதற்குக் கீழே காட்டியுள்ளபடி செயல்பட வேண்டும்.
1. எந்த இடத்தில் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை வர வேண்டுமோ, அந்த இடத்திற்குக் கர்சரைக் கொண்டு செல்லவும்.
2. ரிப்பனுடைய Insert டேப் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. Text குரூப்பில் Quick Parts என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் Field என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Field டயலாக் பாக்ஸினைக் காட்டும்.
4. அடுத்து Categories கீழ்விரி பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Field Names என்பதில் NumPages என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து டயலாக் பாக்ஸை மூடி, பீல்டை இணைக்க ஓகே, கிளிக் செய்திடவும்.
இனி, மொத்த பக்க எண்கள் எண்ணிக்கை உங்கள் டாகுமெண்டில் காட்டப்படும்.
வேர்ட் டேபிளில் சில செயல்பாடுகள்
TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல
SHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல
ALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல
ALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசிசெல்லுக்குச் செல்ல
ALT+PAGE UP : நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல
ALT+PAGE DOWN: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல
UP ARROW : முந்தைய படுக்கை வரிசை செல்ல
DOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல

Advertisements
%d bloggers like this: