அஞ்சலி முத்திரை

ஞ்சலி என்பது கைகளைக் கூப்பி, வணங்குவதையும் நன்றி தெரிவித் தலையும் குறிக்கும். பெரியவர்களை வணங்கவும் வரவேற்கவும் நன்றி செலுத்துவும் விடைபெறவும் இந்த அஞ்சலி முத்திரையை நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், இதுவும் முத்திரைகளுள் ஒன்றுதான். நல்ல உணர்வுகள், சமநிலையான மனநிலை ஆகியவற்றைத் தருகிறது இந்த அஞ்சலி முத்திரை.

எப்படிச் செய்வது?



தரையில் நின்றுகொண்டோ,  சப்பணம் இட்டு அமர்ந்தோ செய்யலாம். வணக்கம் வைப்பதற்கு கைகளை எப்படி வைக்கிறோமோ அதுதான் அஞ்சலி முத்திரை. அதாவது, கைகளானது மேலே, கீழே என ஏற்ற இறக்கமாக இருக்கக் கூடாது. இரண்டு கைகளுக்கும் நடுவே இடை வெளியும் இருக்கக் கூடாது. சரியான அளவில் சரியான அழுத்தத்தில் இருக்க வேண்டும். 5 – 10 நிமிடங்கள் வரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் ஐந்து முறை செய்யலாம்.

பலன்கள்

*மூளையின் வலது மற்றும் இடதுபுறச் செயல்பாட்டை சமன் செய்கிறது. அமைதி, தெளிவு கிடைக்கும்.

**விரல்கள், கைகள், மணிக்கட்டு, முழங்கை வலுப்பெறுகிறது. உடலுக்கு சக்தி மற்றும் பலம் கிடைக்கிறது.

*இதயத் தசைகளுக்கு வலு கிடைக்கிறது. படபடப்பு நீங்கி இதயத் துடிப்புச் சீராகிறது.

*எந்த ஒரு கலையைக் கற்கும் முன்பும் அஞ்சலி முத்திரை செய்தால், கற்கும் திறன் மேம்படும். உதாரணத்துக்கு, நடனம், பாடல் பழகும் முன்பும், படிப்பதற்கு முன்பும் அஞ்சலி முத்திரை செய்து விட்டுத் தொடங்கலாம்.

*மனப் பிரச்னைகள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகள் குறையும்.

*ஒரு நோய் மீண்டும் உருவாவதற்கான வாய்ப்புகளைத் தடுப்பதில் சிறந்தது இந்த அஞ்சலி முத்திரை.

*ஒரு செயலைத் தொடங்குவதற்கும் முடிப்பதற்கும் இந்த முத்திரையைச் செய்வது நல்லது.

*அஞ்சலி முத்திரையோடு விடைபெறுவோம்.

%d bloggers like this: