அழுத்தம் போக்கும் மல்லிகை

அழகுக்காவும், நறுமணத்துக்காவும், பெண்கள் தலையில் சூடிக்கொள்ளும் மல்லிகைப்பூவில், நோய் போக்கும் பல நல்ல மருத்துவக் குணங்கள் உள்ளன. மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்னைகளால் கஷ்டப்படும் பெண்கள், பிடித்த அளவு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடிக்கொண்டால், மன அழுத்தம் குறைந்து, உடல் குளிச்சி அடையும்.

மல்லிகைப் பூவை, நம் முன்னோர், பல்வேறு பிரச்னைகளுக்கான மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதே போல, பல்வேறு மருத்துவக்குணம் கொண்ட மல்லிகைப்பூ, எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஓட்டல்களில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு, வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும்.
அப்படியானவர்கள், சிறிதளவு மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், பொதுவாக, அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர, அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.
இதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி, அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை தண்ணீரில் கலந்து குடித்து வர, சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.
தலைவலியை குணமாக்கும்: நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும். இது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. சிலருக்கு, மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.
மல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய், பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது. எங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும்
மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும். மல்லிகைப் பூவை அரைத்து, மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, நிவாரணம் கிடைக்கும்.
தெளிவான பார்வை: மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
மல்லிகைப் பூவை, நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால், கண்ணில் வளரும் சதை வளர்ச்சி குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம். மல்லிகையின் இலையை வாயிலிட்டு மெல்ல, வாய்ப்புண் தீரும். இலையை நெய்யில் வறுத்து பின் ஒற்றமிட தொண்டை நோய் தீரும். இலைச்சாறு அல்லது இலையிலிருந்து எடுக்கும் எண்ணெய் காது நோய்க்கு நல்லது. மல்லிகை வேர்த் தூளையும், வசப்பு தூளையும் பழச்சாறு கலந்து பூச, தோல் நோய்கள் தீரும். வெறும் தலைக்கு சூடிக்கொள்வதில் மட்டுமல்லாமல், மருத்துவ குணத்துக்கும் பயன்படுத்தினால் நலன் தரும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: