Advertisements

அதீத பசியைக் குறைக்க 3 வழிகள்

தீதப் பசி… எப்போதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்போலத் தோன்றும் உணர்வு. `உடல் இளைக்கணும்’ என்ற இலக்கு இருந்தாலும், பசி வந்து தொந்தரவு தருகிறது. பசியிலே பொய்ப் பசியும் உள்ளது. அதாவது, மதிய உணவு சாப்பிட்ட பின்னரும், ஒரு லட்டைப் பார்த்தால், `உடனே சாப்பிடணும்’ என்ற தூண்டுதல் ஏற்பட்டு,

பசியாக மாறும். இதைச் சமாளிப்பது எப்படி? தெரிந்துகொள்வோம்…
பசி உணர்வைத் தூண்டுவது, கட்டுப்படுத்துவது மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியின் வேலை. நியூரோடிரான்ஸ்மிட்டர்களான செரட்டோனின், டோபமைன், நார்அட்ரினலின் ஆகியவை மூளைக்கு சிக்னலை அனுப்பும். இதன் மூலம் எப்போது சாப்பிடுவது, சாப்பிடுவதை எப்போது நிறுத்துவது போன்ற செயல்கள் நடைபெறும்.
பசியை அடக்குவதால், மூளைக்குச் செல்லும் தகவல்களில் மாற்றங்கள் ஏற்படும்.


உங்களுக்குத் தெரியுமா?

நிறங்களில் நீல நிறம் மட்டும், பசி உணர்வைத் தராது.
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், உணவை நீல நிறத் தட்டில் வைத்து சாப்பிடலாம். நீல நிறக் கைக்குட்டை அல்லது திரைச்சீலையாவது அருகில் இருக்கட்டும். உளவியல் ரீதியாக, சாப்பிடும் அளவை இது குறைக்கும்.


குழுவாகச் சேர்ந்து சாப்பிடும்போது, சாதாரணமாக நாம் சாப்பிடும் அளவைவிட 33% அதிகம் உட்கொள்கிறோம்.
உடல் இளைக்க நினைப்பவர்கள், தனியாக உட்கார்ந்து சாப்பிடுவது நல்லது.


தூக்கமும் உணவு பழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிகம் தூங்குபவர்கள், இயல்பைவிட 16 சதவிகிதம் அதிகமாக உணவை எடுத்துக்கொள்கின்றனர்.
எனவே, போதுமான அளவு தூக்கத்தைத் தூங்குங்கள். உங்களை அறியாமலேயே நீங்கள் சரியான அளவில் உண்ணத் தொடங்கிவிடுவீர்கள்..!

Advertisements
%d bloggers like this: