கொத்தமல்லி சாப்பிடுங்க ஆரோக்கியம் உத்திரவாதம்!

கொத்தமல்லியின் மருத்துவ குணம் அறிந்தே, சமையலில் தவறாது சேர்த்து வந்திருக்கிறார்கள். எல்லா உணவையும் மணக்கச் செய்யும் மகிமை கொத்தமல்லிக்கு உண்டு. இதனுடைய விதை, இலை ரெண்டுமே மருத்துவக்குணம் கொண்டது. இதன் விதை, காரம், கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என, நான்கு விதமான சுவைகளும் சேர்ந்த அற்புதக்கலவை.
கொத்தமல்லி கீரையில் உயிர் சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்துக்கள் உள்ளன.

மனிதனின் உடலை வலுவாகும் அத்தனை சத்துக்களும் இதில் இருக்கிறது. உடலின் கொழுப்புச்சத்தை குறைத்து, ரத்த நாளங்களில் கொழுப்பு உறைவதை தடுக்கிறது. இதனால் மாரடைப்பு ஆபத்தை குறைக்கிறது. கண்பார்வை தெளிவடையும். சிறுவயதில் இருந்தே இந்த கீரையை, குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
இதனால், ஆயுள் வரை பார்வை மங்காது. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அவசியம் சேர்த்து வந்தால் குறை நீங்கும். ரத்தம் சுத்தமடையும்; புதிய ரத்தம் உண்டாகும். ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கிறது, இன்சுலின் சுரப்பைத் தூண்டுகிற ஆற்றல் இருப்பதால், சர்க்கரை நோயை குறைக்கும் தன்மை வாய்ந்தது.
கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து, சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும். பீனிசம், மூக்கடைப்பு, மூக்கில்புண், மூக்கில் சதை வளர்தல் போன்ற மூக்கு தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும்.
நான்கு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதையைப் போட்டு நன்கு காய்ச்சி, ஆறவைத்துக் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் சூடு தணியும்; களைப்பும் காணாமல் போய் விடும்.
ஐந்து கிராம் கொத்துமல்லி விதையை, இடித்து அரை லிட்டர் நீரில் விட்டு 100 மில்லியாகக் காய்ச்சி வடிகட்டி, பால் சர்க்கரை கலந்து காலை, மாலை சாப்பிட இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு ஆகியவை நீங்கும்.
புதிதாக ஏற்படும் வெட்டுக் காயங்களுக்கு, கொத்தமல்லி விதையை பொடி செய்து அதை காயத்தின் மீது அடிக்கடி தடவினால் புண் குணமாகும். கொத்தமல்லி இலை, சீரகம் சேர்த்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து, கஷாயம் செய்து அருந்தினால் சுவையின்மை நீங்கி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல் நிற்கும். வீட்டில் தொட்டிகளில் வளர்க்கலாம்.
தனியாவை மணல் கலந்து விதைக்க வேண்டும். ஒரு வாரத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். முறையாக நீர் ஊற்றி வந்தால் வீட்டிலேயே தேவையான கீரையை பறித்து சமையலுக்கு உபயோகிக்கலாம்.
தினசரி உணவில் தவறாது, கொத்தமல்லி கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். துவையல், தொக்கு, கொத்தமல்லி சாதம், ரசம், கொத்தமல்லி கீரை ஜூஸ் என ஏதோ ஒரு விதத்தில் உட்கொண்டு வாருங்கள். நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: