Advertisements

வெள்ளரி தரும் எழில்தோற்றம்!

கருவளையத்தைப் போக்குகிறது

கண்களைச் சுற்றிலும் ஏற்படும் கருவளையத்தை விரைவாகவும், முழுமையாகவும், பாதுகாப்பாகவும் நீக்குகிறது. வெள்ளரியில் உள்ள சிலிக்கா, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கருவளையத்தின் மீது விரைவாகச் செயல்படுகின்றன. தினமும் இரண்டு வெள்ளரித் துண்டுகளை கண்களின் மீது 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம் அல்லது வெள்ளரிச் சாறில் பஞ்சை நனைத்து, இரண்டு கண்கள் மீது வைத்திருக்கலாம்.

கண் வீக்கம்

வெள்ளரி, கண்களின் கீழ் ரப்பைப் பகுதியில் ஏற்படும் வீக்கத்தைப் போக்குகிறது. வெள்ளரியில் உள்ள ஆஸ்கார்பிக் அமிலம், கண்களில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றுவதன் மூலம் கண் வீக்கம் நீங்குகிறது. கண் வீக்கம் நீங்க வெள்ளரித் துண்டுகளை 20 நிமிடங்கள் வைத்திருக்கலாம்.

புள்ளிகளை நீக்குகிறது

வெள்ளரிச் சாறை முகத்தில் தொடர்ந்து பூசிவர, முகம் மற்றும் கழுத்தில் தோன்றும் சிவந்த, வெளிறிய புள்ளிகள் நீங்கும்.

சருமத்தைப் பொலிவாக்குகிறது

வெள்ளரிச் சாற்றை முகத்தில் தொடர்ந்து பூசிவர, சருமம் பொலிவாகும். சருமத்தின் நிறம் மேம்படும். சருமத்தில் உள்ள சிறிய தழும்புகளையும் புள்ளிகளையும் நீக்குகிறது. வெள்ளரிச் சாறுடன் எலுமிச்சை சேர்க்கும்போது பலன் இரட்டிப்பாகும்.

சூரியக் கதிர் பாதிப்புகளை நீக்குகிறது

வெயிலில் அதிக நேரம் அலைந்து திரிபவர்களுக்கு ஏற்படும் சருமப் பாதிப்புகளை வெள்ளரி நீக்கும். வெளியில் சென்று வந்ததும் வெள்ளரிச் சாறைப் பூசிவிட்டு 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமத் துவாரங்களை சுத்தமாக்குகிறது

முகத்தில் சீபம் அதிகம் சுரப்பதாலும், வெளியே சுற்றுவதாலும் முகத்தில் உள்ள சரும துவாரங்கள் அடைபடுகின்றன. வெள்ளரிச் சாறு சரும துவாரங்களை சுத்தமாக்கி, சருமத்தை புத்துணர்வு பெறச் செய்கிறது. வெள்ளரியுடன் ஆப்பிள் சிடர் வினிகர், எலுமிச்சைச் சாறு, தேன், காற்றாழைச் சோறு இவற்றில் ஏதேனும் ஒன்றைச் சேர்த்துப் பூச நல்ல பலன் கிடைக்கும்.

சருமத்தை மென்மையாக்குகிறது

வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஊடுருவி உட்புறத் தோலை அடைந்து ஒட்டுமொத்த சருமத்தையும் மென்மையாக்குகிறது. இதனால், சரும சுருக்கங்கள் நீங்கி சருமம் மென்மையாகிறது. ஆரோக்கியமாகிறது.

Advertisements
%d bloggers like this: