Advertisements

டிஜிட்டல் தகவல்கள்

அண்மையில் Deloitte Mobile Consumer Survey 2016 அறிக்கை ஒன்று ஆய்வுக்குப்பின் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில், 53% பேர், தங்களுக்கு வேண்டிய மொபைல் போன்களை, இணைய தளம் மூலமே வாங்கி வருகின்றனர். 39% பேர் கடைகளில் வாங்குகின்றனர். 2017ல், பலர், (45% பேர்) தாங்கள் 4ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு நிச்சயம் மாறி விடுவதாகக் கருத்து தெரிவித்தனர்.

மொபைல் அழைப்புகள் இடையே ‘கட்’ ஆவதை நிறுத்த 1.5 லட்சம் இணைப்பு கோபுரங்கள் புதியதாக நம் நாட்டில் நிறுவப்படும். ஏற்கனவே, சென்ற ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், தொலை தொடர்பு நிறுவனங்கள், 1.3 லட்சம் இணைப்பு கோபுரங்களை நிறுவியுள்ளன.
இந்தியாவில், இன்னும் 95 கோடி பேர் இணைய தொடர்பு இல்லாமல் வாழ்கின்றனர். Assocham-Deloitte என்ற இரு நிறுவன ஆய்வமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் விலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், உலகிலேயே மொபைல் டேட்டா கட்டணங்கள், இந்தியாவில் தான் குறைவாக இருந்தாலும், இணைய இணைப்பின்றி 95 கோடி பேர் இருப்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியதாக உள்ளது என்று அறிவித்துள்ளது. ஆனால், நிச்சயம் வெகு விரைவில் பலர் இணையத் தொடர்பினைப் பெறுவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நிதிப் பரிமாற்றம் அனைத்தும் டிஜிட்டலாக இருக்க வேண்டும் என்ற இலக்கு, நடப்பு 2017 ஆம் ஆண்டில் பலம் பெறும். 21 ஆண்டுகளுக்கு முன் இணையம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இன்றைய நிலையில், 133 கோடி மக்களில், 37 கோடி பேர் மட்டுமே இணையத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில் இந்த நிலையில் பெரிய அளவில் மாற்றம் வரும்.
சீனாவில் அதிவேக 4ஜி நெட்வொர்க் இணைப்பு பயனாளர்களின் எண்ணிக்கை 73.4 கோடியைத் தாண்டியுள்ளது. வர்த்தக ரீதியாக 5ஜி இணைப்பு, வரும் 2020 ஆம் ஆண்டில் தருவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்ற ஜூன் வரையில், சீனாவில் இணையத்தைப் பயன்படுத்தியவர்கள் எண்ணிக்கை 71 கோடி. இது சீனாவின் ஜனத்தொகையில் 51.7% ஆகும்.

Advertisements
%d bloggers like this: