Daily Archives: ஜனவரி 21st, 2017

மருத்துவம் படிக்க ஆர்வமா? – ‘நீட்’ தேர்வுக்குத் தயாராகுங்கள்!

தோ… பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் பிள்ளைகள். அடுத்து என்ன படிக்கலாம் என அவர்களோடு சேர்ந்து பெற்றோரும் யோசிக்கும் நேரம் இது. பெரும்பாலானோரின் கனவு மருத்துவக் கல்விதான். ஆனால், அதிக மதிப்பெண் மட்டுமே போதாது என்கிற நிலை இன்று உருவாகியுள்ளது.  சி.பி.எஸ்.சி நடத்துகிற `நீட்’ தேர்வு (National Eligibility cum Entrance Test) எழுத வேண்டும். இதில் குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற்றால்தான் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியும்.

Continue reading →

அந்த பன்னீர்செல்வமா வரணும்!”

ன்னீர், கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார்; பாட்டும் பாட ஆரம்பித்துவிட்டார். இனி ஆட்சி நடத்த வேண்டும். `அவரை, தொடர்ந்து ஆட்சி நடத்தவிடுவார்களா? அவரே ஆட்சியில் தொடர்ந்தாலும், அவர் நினைத்ததை எல்லாம் செய்யவிடுவார்களா?’ என்ற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், பன்னீர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர். அவர் கையில்தான் ஆட்சிச் சக்கரத்தின் லகான் இருக்கிறது. அதை அவர் எவ்வளவு லாகவமாகச் செலுத்தப்போகிறார் என்பதை வைத்தே அவரது பெயரை வரலாறு வரவில் வைக்கும். பன்னீர், இன்னமும் கண்ணீர் வடித்துக்கொண்டு இருக்க முடியாது.

Continue reading →

இலவச ஆண்ட்டி வைரஸ் செயலிகள்

விண்டோஸ் இயக்கத்திற்கென இணையத்தில் கிடைக்கின்ற இலவச வைரஸ் தடுப்பு செயலிகளை, AV Test Institute என்னும் அமைப்பு ஆய்வு செய்து, இந்த ஆண்டில் பயன்படுத்தக் கூடிய ஐந்து செயலிகளைப் பரிந்துரை செய்துள்ளது. மால்வேர் மற்றும் வைரஸ்களிடமிருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பது, நல்ல இணைய தளங்களைக் கூட மால்வேர் எனக் குறிக்கும் தவறை மேற்கொள்ளாமல் இருப்பது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் குறுக்கிடாமல் இருப்பது என முக்கியமான ஆறு செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த தேர்வினை நடத்தி, முடிவுகளை இந்த ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட ஐந்து வைரஸ் எதிர்ப்பு இலவச செயலிகளை இங்கு பார்க்கலாம்.

கொமடோ ஆண்ட்டி வைரஸ் Continue reading →

வீகன் டயட் எனும் நனி சைவம்!

றைச்சி உணவுகள் மட்டுமல்ல… பால், முட்டை உள்பட அனைத்துவிதமான விலங்கு உணவுப் பொருட்களையும் தவிர்த்து, தாவரங் களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதுதான் ‘வீகன்’ டயட். இதையே `நனி சைவம்’ என்றும் சொல்கிறார்கள்.

Continue reading →