Advertisements

வீகன் டயட் எனும் நனி சைவம்!

றைச்சி உணவுகள் மட்டுமல்ல… பால், முட்டை உள்பட அனைத்துவிதமான விலங்கு உணவுப் பொருட்களையும் தவிர்த்து, தாவரங் களில் இருந்து பெறப்படும் உணவுப் பொருட்களை மட்டுமே உண்பதுதான் ‘வீகன்’ டயட். இதையே `நனி சைவம்’ என்றும் சொல்கிறார்கள்.

தாவர உணவுகளில் கொழுப்புச் சத்து உண்டு. ஆனால், உடலுக்குத் தீமையான கெட்ட கொலஸ்ட்ரால் கிடையாது. இறைச்சி, முட்டை, பால் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. இதனால் பருமன், இதயநோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. வீகன் டயட்டில் தேவையற்ற கொழுப்பு சாப்பிடுவது தவிர்க் கப்படுவதால், இயல்பாகவே உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. இதுபற்றி தெளிவுபடுத்துகிறார் வீகன் டயட் நிபுணர் சரவணன்.

 

யாருக்கு இந்த டயட் பெஸ்ட்?

பொதுவாக, இது, வாழ் நாள் முழுமைக்குமான டயட். எனவே, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இதைப்பின்பற்றலாம். தாவர உணவுகளில் ஊட்டச் சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானத்துக்கு எளிது என்பதால், செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள் பின்பற்றலாம்.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழி வாளர்கள், இதயநோய் உள்ளவர்களுக்கும் இது சிறந்தது. மருத்துவரின் ஆலோசனையோடு இதைப் பின்பற்றும்போது பிரச்னைகளின் தீவிரம் மட்டுப்படும்.

என்னென்ன சாப்பிடலாம்?

காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானி யங்கள், சிறுதானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், விதைகள், கொட்டைகள், உலர்பழங்கள், எண்ணெய்கள், எண்ணெய் வித்துகளைச் சாப்பிடலாம்.

எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்?

அனைத்து வகை அசைவ உணவுகள், பால், மோர், தயிர், பாலாடைக் கட்டி, வெண்ணெய், நெய், பனீர், யோகர்ட், மயோனைஸ் ஆகிய வற்றைத் தவிர்க்க வேண்டும்.

மாற்று உணவுகள் உண்டா?

வீகனில் அசைவம், பால், தயிர், மோர், வெண்ணெய் என அத்தனைக்கும் மாற்று உண்டு. பசும்பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால், பாதாம் பால், சோயா பால், வேர்க்கடலைப் பால் பயன்படுத்தலாம். பனீருக்குப் பதில் சோயா பனீர், முந்திரி சீஸ் பயன்படுத்தலாம். சோயா மற்றும் வேர்க்கடலைப் பாலில் இருந்து மோர் தயாரிக்க முடியும். காபி, டீக்குப் பதில் மூலிகை டீ, கிரீன் டீ, லெமன் டீ போன்றவற்றை அருந்தலாம். பாலில் இருந்து கிடைக்கும் கால்சியத்தைவிட எள்ளில் கிடைக்கும் கால்சியம் அதிகம். எனவே, தினமும் ஓர் எள்ளுருண்டை சாப்பிடலாம். இறைச்சிக்குப் பதிலாகக் காளான், சோயா டோஃபு சாப்பிடலாம்.

இது முழுமையான டயட்டா?

ஆமாம். இந்த டயட்டை அகாடமி ஆஃப் நியூட்ரீஷியன் அண்ட் டயடெட்டிக்ஸ் அங்கீகரித்துள்ளது. இந்த டயட்டில் அத்தியா வசியமான அத்தனை சத்துகளும் கிடைக்கின்றன. நமக்குத் தேவையான மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், நுண்ணூட்டச் சத்துகள் அனைத்தும் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால், இவை அனைத்துமே நம் உடலுக்குக் கிடைக்கின்றன. எனவே, இது ஒரு முழுமையான டயட். மேலும், பசும்பாலைக் காட்டிலும், தாவர உணவுகளில் நிறையவே கால்சியம் உள்ளது. 100 மில்லி பாலில் இருந்து 120 மி.கி கால்சியம் கிடைக்கும். 100 கிராம் எள்ளிலோ 1,160 மி.கி கால்சியம் உள்ளது.

வீகன் டயட்டில் கொலஸ்ட்ரால் சிறிதளவும் இல்லை. மாறாக உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான ஒமேகா 3 கொழுப்புச்சத்தை நிறைவாகப் பெற முடியும். மேலும், வைட்டமின் பி12 சத்தைச் செறிவூட்டப்பட்ட சோயா பாலிலும், வைட்டமின் டி சத்தைச் சூரியஒளியில் இருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி அவசியமா?

ஆமாம். இது ஒரு முழுமையான டயட் என்பதால், உடற்பயிற்சி அவசியம். தினமும் காலையில் எழுந்து நடைப்பயிற்சி செய்வ துடன், உடற்பயிற்சி ஆலோசகரின் பரிந்து ரையின் பேரில் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளைச் செய்வது கட்டாயம்.  முதியவர்கள், மூட்டுவலி, அதிக எடை உள்ளவர்கள் நிபுணர்கள் பரிந்துரையுடன் இதைச்செய்யலாம்.

எடைக் குறைப்புக்கான இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டு உடற்பயிற்சியில் ஈடுபடும்போது வீகன் டயட்டின் பலன் இரட்டிப்பாகும்!

Advertisements
%d bloggers like this: