Advertisements

உலகின் 50% சொத்து 8 பேர் கையில்!

நாம் 500 ரூபாய்க்கும், 1,000 ரூபாய்க்கும் அல்லாடுகிறோம். ஆனால், உலகின் பாதி சொத்து வெறும் 8 பேரிடம்தான் இருக்கிறது என்றால் அதிர்ச்சியாக உள்ளது அல்லவா!
சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஆக்ஸ்போம் நிறுவனம் ஆய்வு நடத்தி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், உலகின் பொருளாதார வளர்ச்சி என்பது வெறும் எட்டு நபர்களை பொறுத்ததே என்றும், உலகின் 50 சதவிகித சொத்து வெறும் எட்டு பேரிடம் இருப்பதாகவும் அந்த அமைப்பு சொல்லி இருக்கிறது.  

ஆக்ஸ்போம் அறிக்கையின்படி, உலகப் பொருளாதாரத்தை ஆளும் அந்த எட்டு மெகா பணக்காரர்கள் இவர்கள்தான்…
பில் கேட்ஸ், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் – 75 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
அமென்ஷியோ ஒர்டேகா, ஸ்பானிஷ் தொழில் அதிபர் – 67 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.
வாரன் பஃபெட், அமெரிக்க பங்குச் சந்தை முதலீட்டாளர் – 60.8 பில்லியன் அமெரிக்க டாலர்.
கார்லோஸ் ஸ்லிம் ஹெலு – மெக்சிகோ தொழிலதிபர் – 50 பில்லியன் அமெரிக்க டாலர்.
ஜெஃப் பெஜோஸ்,  அமேசான்.காம் நிறுவனர் – 45.2 பில்லியன் அமெரிக்க டாலர்.
மார்க் சக்கர்பெர்க், ஃபேஸ்புக் நிறுவனர் – 44.6 பில்லியன் அமெரிக்க டாலர்.
லேரி எலிசன், ஆரக்கிள் நிறுவனர் – 43.6 பில்லியன் அமெரிக்க டாலர்.
மைக்கேல் ப்ளூம்பெர்க், தொழிலதிபர் – 40 பில்லியன் டாலர்.
உலக அளவில் தனிப்பட்ட நாடுகளை எடுத்துக் கொண்டால், ரஷ்யாவில்தான் அதிக அளவில் சமநிலையற்ற போக்கு நிலவுவதாக ஆக்ஸ்போம் அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் 74.5% பொருளாதார வளர்ச்சியினை 1% மட்டுமே உள்ள ரஷ்ய செல்வந்தர்கள் மட்டுமே அனுபவித்து வருகிறார்கள். அமெரிக்காவின் ஒட்டுமொத்த செல்வத்தின் 42.1 சதவிகிதம் 1 சதவிகித   அமெரிக்க செல்வந்தர்களிடம் இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, 58 சதவிகித செல்வம் 1 சதவிகித செல்வந்தர்களிடம் இருக்கிறது.
நாம் அடுத்த ஜென்மத்திலாவது இந்த செல்வந்தர்களிலே ஒருவராகப் பிறப்போமா?

Advertisements
%d bloggers like this: