Daily Archives: ஜனவரி 29th, 2017

கைகள் பத்திரம்… கேட்ஜெட்ஸ் அலெர்ட்!

காலை எழுந்ததும் நியூஸ் பேப்பர் படிக்கும் காலம் எல்லாம் மலையேறிவிட்டது. பலரும் கண் விழிப்பதே செல்போனில்தான். ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், ட்விட்டரிலும் ஒரு வலம்வந்தால் நாட்டு நடப்புகள் விரல்நுனிக்கு வந்துவிடுகின்றன. கிளம்பி அலுவலகத்துக்கு வந்து கணிப்பொறி முன் அமர்ந்தால், மாலை வரை கம்ப்யூட்டர்தான் கதி.  இடையிடையே அவ்வப்போது கிடைக்கும் நேரத்திலும் மொபைலை எடுத்து விரலால் வருடிக்கொண்டிருப்பதுதான் ரிலாக்சேஷன். இப்படி, சதா சர்வகாலமும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களோடு புழங்குவது கண்களுக்கு மட்டும் அல்ல… கைகளுக்கும் ஆபத்தானது. இதனால் செல்ஃபி எல்போ மற்றும் டென்னிஸ் எல்போ பிரச்னைகள் வரலாம். மருத்துவமொழியில் சொன்னால் லேட்டரல் எபிகாண்டிலிடிஸ் (Lateral epicondylitis). இதைத் தவிர கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலியும் சிலருக்கு ஏற்படுகின்றன. இந்த வலிகள் எவ்வாறு ஏற்படுகின்றன… இதற்கு என்ன தீர்வு என்று பார்ப்போம்!

லேட்டரல் எபிகாண்டிலிடிஸ்

Continue reading →

விண்டோஸ் 10: வர இருக்கும் புதிய அப்டேட்

விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கான, பெரிய அளவிலான மேம்படுத்தல், வரும் ஏப்ரல் மாதம் பயனாளர்களுக்குத் தரப்பட இருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம், இதனை Creators Update என அழைக்கிறது. ஏற்கனவே, இந்த மேம்படுத்தல் பைல்கள், விண்டோஸ் Insider Program திட்டத்தில் இணைந்தவர்களுக்கு வழங்கப்பட்டு பின்னூட்டங்களும், சோதனை முடிவுகளும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் பெறப்பட்டு வருகின்றன. அவற்றிலிருந்து, இந்த மேம்படுத்தலில், பயனாளர்கள் பெறவிருக்கும் புதிய வசதிகள் குறித்துத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஸ்டார்ட் மெனு போல்டர்

Continue reading →

கார்டியாக் அரெஸ்ட் – ஹார்ட் அட்டாக் என்ன வித்தியாசம்?

நேத்து நைட்கூட அந்த மனுஷன் எங்கிட்ட நல்லாத்தான் பேசிட்டு இருந்தார்… காலையில இப்படி ஆயிடுச்சே…’  என்று நெருக்கமான நண்பர்கள் வருந்துவதைப் பல இடங்களில் காதுபடக் கேட்டு இருக்கிறோம். இதுபோன்ற திடீர் இழப்புகளுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது இதயக்கோளாறுகள். இதயத்தை நேரடியாகத் தாக்கும் பல பிரச்னைகள் இருந்தாலும், நாம் அனைத்தையும் மாரடைப்பு (Heart Attack) என்றே கருதுகிறோம். குறிப்பாக, திடீர் இதயத்துடிப்பு முடக்கம் (Sudden Cardiac Arrest) பிரச்னையையும் நாம் மாரடைப்பு என்றே புரிந்துவைத்திருக்கிறோம். ஒருவர் எந்தவித வலிக்கான முன் அறிகுறிகளும் இன்றி திடீர் என இதயப்பிரச்னையால் இறந்தால், அது இதயத்துடிப்பு முடக்கமாக  (Cardiac Arrest) இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். மாரடைப்புக்கும் திடீர் இதயத்துடிப்பு முடக்கத்துக்கும் வேறுபாடுகள் என்னென்ன? இதயநோய் நிபுணர் எம்.சொக்கலிங்கத்திடம் கேட்டோம்.

 

மாரடைப்பு  (Heart Attack)

Continue reading →