விண்டோஸ் 7 உதவி நிறுத்தம்

பன்னாட்டளவில், அதிகம் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 தொடர்ந்து இயங்கி வருகிறது. விண்டோஸ் 10 சிஸ்டம் 20% கம்ப்யூட்டர்களிலும், விண்டோஸ் 7 சிஸ்டம், 50% கம்ப்யூட்டர்களிலும் இயங்கி வருகின்றன. இருப்பினும், மைக்ரோசாப்ட் அதற்கு விடை கொடுக்கும் செயல்பாடுகளில் இறங்கியுள்ளது. அதன்

ஜெர்மானிய வலை மனை தளத்தில், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான அனைத்து உதவிகளும், வரும் ஜனவரி 14, 2020 அன்று நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில், விண்டோஸ் 7 பயன்படுத்துவோருக்கு எந்த உதவியும் மைக்ரோச்சாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட மாட்டாது. பாதுகாப்பு சார்ந்த மற்றும் தொழில் நுட்ப உதவிகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து கிடைக்காது.
இதற்கான முதன்மை உதவி, சென்ற 2015 ஆம் ஆண்டு, ஜனவரி 13 முதல் நிறுத்தப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல, விண்டோஸ் 8.1 சிஸ்டத்திற்கு முதன்மை உதவி வரும் ஜனவரி 9, 2018 அன்று நிறுத்தப்படும். மொத்த உதவிகள் ஜனவரி 10, 2023 அன்று நிறுத்தப்படும். விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, இது அக்டோபர் 13, 2020 மற்றும் மொத்த உதவி நிறுத்தம் அக்டோபர் 14, விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான உதவி நிறுத்தம் குறித்த அறிவிப்பு, அதன் பயனாளர்களுக்குக் கலவரத்தை உண்டு பண்ணுவதாக உள்ளது. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் இயக்கத்திற்கான செயல்முறைச் செலவுகள் அளவு கடந்து அதிகமாக இருப்பதாக, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி, விண்டோஸ் 7 சிஸ்டத்தின் தற்போதைய கட்டமைப்பு, வைரஸ் மற்றும் மால்வேர் உட்புகப் பல வழிகளைக் கொண்டுள்ளதாகவும் மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இத்துடன், கம்ப்யூட்டர் மற்றும் துணை சாதனங்கள் தயாரிப்பவர்கள், விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இயங்கும் வகையில், தங்கள் சாதனங்களுக்கு ட்ரைவர் பைல்களை உருவாக்கித் தர மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எம்.டி. இன்டெல் அல்லது குவால்காம் நிறுவனத்தின் புதிய சிப்களில், விண்டோஸ் 7 இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படியானால், இதற்கான தீர்வு என்ன? ஒரே தீர்வு, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதுதான். தனிப்பட்ட முறையில், விண் 1-0 சிஸ்டத்தில் பாதுகாப்பு வளையங்கள் அதிகமாகத் தரப்பட்டு, அதன் இயக்கம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பயோ மெட்ரிக் பாதுகாப்பு வசதியும் வழங்கப்படுகிற்து. பெர்சனல் அசிஸ்டன்ட் கார்டனா இதன் புதிய தனி வசதியாகும்.
பொதுவாக, மைக்ரோசாப்ட் மிக முன்னதாகவே தன் சிஸ்டங்களுக்கான உதவி நிறுத்தப்படும் நாளை அறிவித்துவிடுகிறது. இதனால், பயனாளர்கள், அடுத்த சிஸ்டத்திற்குத் தங்கள் கம்ப்யூட்டர்களை உயர்த்திக் கொள்ளலாம்.
சிஸ்டம் மாறிக் கொள்வதைப் பொறுத்தவரை, வீடுகளில் வைத்துப் பயன்படுத்துவோருக்குச் சிக்கல் இருக்காது. வர்த்தக அலுவல்களுக்கெனப் பயன்படுத்துபவர்களுக்குத் தான், சிஸ்டம் மாறுதல் ஒரு சவாலாக இருக்கும். பல மாதங்கள், ஏன், சில ஆண்டுகள் கூடத் தேவைப்படலாம்.
நிறுவனங்களுக்கென மட்டும் தயாரிக்கப்பட்ட புரோகிராம்களைப் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்து இயங்கும் வகையில் மாற்றப்பட வேண்டும். இதற்கான காலம் மற்றும் ஹார்ட்வேர், சாப்ட்வேர் செலவினங்கள் அதிகம் தேவைப்படும்.
இருப்பினும், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் தொடர்ந்து தந்து வரும் புதிய வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்காக, அனைவருமே, அதற்கு மாறிக் கொள்வது நல்லது எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: