காலையில் பசும்பால் பச்சையாக பருகலாம்

பொதுவாக நம்மிடையே பால் என்பது பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு ரசாயன முறையில் பதப்படுத்தப்பட்டு, நமது தேவைக்கு விற்கப்படுகிறது.

அதாவது, சுத்திகரிப்பு என்பது குறிப்பிட்ட அளவில், பாலை கொதிக்க வைத்து பாக்டீரியாவை அழிக்கும் முறையாகும். இம்முறையால் பாலில் உள்ள வைட்டமின் சி 20 சதவீதம், வைட்டமின் பி110 சதவீதம் அழிந்து விடுகின்றது. பாலில் உடலுக்குத் தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாவும் அழிந்து விடுகின்றது. பச்சை பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் பற்றி, சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே கூறியுள்ளனர்.
பசும்பால் கறந்த ஐந்து நாழிகைக்குள், இரண்டு மணி நேரத்தில் குடிப்பது நல்லது. அவ்வாறு உண்டால் அந்த பால், தேவாமிர்தத்துக்கு ஒப்பாகும். இரண்டு மணி நேரத்துக்கு பிறகு குடிக்கக் கூடாது. காலையில் காய்ச்சாத பசும்பால் குடிப்பதால் சூரிய உதய காலத்தில் பச்சை புல் மேய்ந்த ஆரோக்கியமான பசும்பால் உண்பதால் கை கால் எரிச்சல், திரேக எரிச்சல், மஞ்சள் காமாலை, பாண்டு, ரத்த பித்தம், மார்பு சளி, போன்ற நோய்கள் தீரும்.
தேகம் ஒளிவிடும். தாது புஷ்டி உண்டாகும். குழந்தைகளுக்கு தாய்ப்பாலுக்கு மிஞ்சிய வலிமை தரும். பாலை கறந்து சுத்தமான துணியில், மூன்று முறை வடிகட்டி சூடு ஆறுவதற்கு முன்பு உண்பது மிகவும் உத்தமம்.
சித்த மருத்துவ முறையில் மூலநோய், ரத்த மூலம், மஞ்சள் காமாலை, குடற்புண், தோல் நோய்கள், போன்ற நோய்களை குணப்படுத்த, பாரம்பரிய சித்த மருத்துவர்கள் மூலிகைகளை அரைத்து, காய்ச்சாத பசும்பாலில் கலந்து கொடுத்து இன்றும் குணப்படுத்தி வருகின்றனர்.

%d bloggers like this: