Monthly Archives: ஜனவரி, 2017

ஒமேகா 3 ஏன்? எதற்கு? எதில்?

டலுக்கு நன்மை செய்யும் பன்மை நிறைவுறாக் கொழுப்பு அமில (Polyunsaturated fatty acids) வகையைச் சேர்ந்தது, ஒமேகா 3 கொழுப்பு அமிலம். ஆரோக்கியமான மூளை வளர்ச்சி மற்றும் இயக்கம், இதய ரத்த நாள செயல்பாட்டுக்கும் இது அவசியம்.  புற்றுநோய், மனஅழுத்தம், நினைவுத்திறன் குறைபாடு, ஃபேட்டி லிவர் போன்ற பிரச்னைகளைத் தவிர்க்கவும், வந்தபின் அளிக்கப்படும் சிகிச்சையிலும் இதற்கு முக்கிய பங்கு உள்ளது.

Continue reading →

போலியோ சொட்டுமருந்து கட்டாயம் அளிப்போம்!

போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாட்கள் ஜனவரி 29 மற்றும் ஏப்ரல் 2

சில ஆண்டுகளுக்கு முன்வரை அச்சுறுத்திக்கொண்டிருந்த போலியோவுக்கு 2014-ல் முற்றிலும் முடிவுகட்டியிருக்கிறோம். ஆமாம், தொடர்ச்சியான விழிப்புஉணர்வுப் பிரசாரங்கள் மூலமாகவும் ஆண்டுக்கு இரண்டு முறை இலவச போலியோ சொட்டு மருந்து அளித்தல் மூலமாகவும் போலியோ இல்லாத தேசத்தை சாத்தியாமாக்கி இருக்கிறோம். இந்த சாதனையை மேலும் மேலும் தொடர்வோம்! ஊனமற்ற  எதிர்காலத்தை  நம்  குழந்தைகளுக்கு  உத்தரவாதப்படுத்துவோம்.

போலியோ என்றால் என்ன?

Continue reading →

வாய் திறந்து பேசலாம்…!

பேசும்போது வாயில் இருந்து ஏற்படும் துர்நாற்றம், பேசும் விஷயத்தை மறந்து பேசுபவரை மதிப்பிழக்க வைக்கிறது. வாய்ச் சொற்களுக்கு எந்த பலனும் இல்லாது, துர்நாற்றம் மட்டுமே மற்றவர்கள் மனதில் நிற்கும் இந்தத் துயரம் நீங்குவதற்கு, உங்களுக்கான டிப்ஸ் இதோ…

வாய் துர்நாற்றம் ஏன்? Continue reading →

சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?

தினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால்தான் இப்போதெல்லாம் பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

பாடிவாஷ் ஏன் சிறந்தது?

Continue reading →

விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?

னிதன் சமூகமாக வாழத் தொடங்கியது முதலே, வன விலங்குகளை வீட்டு விலங்குக ளாகவும், செல்லப் பிராணிகளாகவும், வளர்க்கத் தொடங்கினான். நாடோடியாக இருந்தபோது, துணையாக நாய் வளர்த்தவன், விவசாய சமூகமாக மாறியபோது பசு, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.நாகரிகம் வளர வளர பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் என வளர்ப்புப் பிராணிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர்.

Continue reading →

சிவ புண்ணியங்கள்!

 

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள், திருநெல்வேலி சிவாலயத்தில் அருளும் முருகப் பெருமானைத் துதித்து மிக அற்புதமான பதிகத்தை அருளியுள்ளார். அதில் எட்டாவதாக ஒரு பாடல்:
பூவளங் கொண்டொழுகச் சிவ புண்ணியந் தான்றழைக்கத்
தாவற வேதினமு நல்ல தாம்பிர வன்னியெனும்
ஆவகை தான்பெருகு நெல்லை யப்பர் விமான முறை
வீவி லயிற்கரனே யென்றன் வேண்டலைப் பூர்த்திசெய்யே!

இந்தப் பாடலில் பாம்பன் சுவாமிகள் ‘சிவபுண்ணியம்தான் தழைக்க’ என்று குறிப்பிட்டு வேண்டுகிறார். நாம், இந்த சிவ புண்ணியங்கள் என்னென்ன எனத் தெரிந்துகொள்வோமா…
* ஆலயத்தைக் கட்டுவது, நிர்மாணிப்பது.
* கோயிலில் மகாதேவரின் விக்கிரகங்கள், லிங்கங்கள், விநாயகர், பார்வதி தேவி, சண்முகர், விநாயகர், பைரவர், சிவபக்தர்களான கணங்கள் ஆகியோருக்கு உரிய சந்நிதிகள், கொடுங்கைகள், அட்டாலங்கள் முதலானவற்றுடன் சிவாலயத்தை நிர்மாணிக்க வேண்டும். இதற்கான பணச் செலவை பொருட்படுத்தக்கூடாது.
* இவற்றில் தாமிரத் தங்கம், கல்லால் ஆன பிரதிமைகளை பக்தியோடு செய்து நியமத்தோடு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.
* இந்தச் சிலைகளுக்கு அபிஷேகமும் அலங்காரமும் செய்து வஸ்திரம், சந்தனம், நைவேத்தியம் அளித்து, ஒளிவீசும் தீபங்களை சந்நிதியில் ஏற்றி, பிறகு மற்ற உபசாரங்களைச் செய்ய வேண்டும்.
* இந்தக் கோயிலுக்குச் சொந்தமாகப் பசுக்களையும், நிலத்தையும் மலர் வனத்தையும் வழங்க வேண்டும்.
இந்தக் கோயிலில் பசுக்களை பாதுகாக்கும் செலவையும் மற்ற செலவுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
* பின்னர் இந்தக் கோயிலுக்காக ஓடைகள், குன்றுகள், கிணறுகள், மரங்கள் ஆகியவற்றை உண்டாக்க வேண்டும்.
* வாகனங்கள், ரதம் ஆகியவற்றை உண்டாக்கி தேர், தெப்பம் போன்ற திருவிழாக்களையும் உற்சவங்களையும் நடத்த வேண்டும்.
* மேலும் சிதிலம் அடைந்த கோயில் களைப் பழுதுபார்த்துச் செப்பனிட்டு, அதை வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும்.
* கோயில் அர்ச்சகர் வசிக்க வீடு அளிப்பதுடன், அவருக்குத் தேவையான தானியங்களும், பொருட்களும் கொடுக்க வேண்டும்.
* குருவைப் பார்த்ததும் நமஸ்கரிக்க வேண்டும். பின்னர் அவருக்கு உரிய பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்ய வேண்டும்.
* சிவ பக்தருக்கு வீடும், வேண்டிய பொருளும் கொடுக்க வேண்டும். அவர்களுக்குச் சிவபுராணம், ருத்ராட்சங் கள், சிவலிங்கங்கள், அன்ன ஆபரணங் கள் ஆகியவற்றை பக்தியோடு கொடுக்க வேண்டும்.
* அவர்களைப் பார்த்ததும் பக்தியோடு வணங்கி, அவர்களிடம் பிரியத்துடனும் அன்புடனும் பேசி அவர்கள் மனம் குளிரும்படி நடக்க வேண்டும். அவர்களுக்கு இயன்றளவு உதவிகளை வாக்கு, மனம், உடல், பணம் ஆகியவற்றால் செய்ய வேண்டும். அவர்களுக்கு ஒருபோதும் தீங்கு செய்யக் கூடாது.
இவைதான் சிவ புண்ணியங்கள். சிவதர்மோத்திரம், திருமந்திரம் முதலான ஞானநூல்கள் கூறும் இத்தகைய புண்ணிய காரியங்களைச் செய்பவர்கள், சகல போகங்களையும் அனுபவித்து, சிவலோகம் சென்று முக்தி பெறுகிறார்கள்.

சந்தோஷமாக வந்தார்… நொந்துபோய் சென்றார்!

வசரச் சட்டத்தை அறிவித்துவிட்டு அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டைத் தொடங்கிவைக்கவரும் தனக்கு, மாணவர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டத்துடன் வரவேற்பு அளிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன், கடந்த  22-ம் தேதி மதுரைக்கு வந்தார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால், தங்கியிருந்த அறையைவிட்டு வெளியே வரமுடியாமல் நொந்துபோன மனநிலையில் அவர் சென்னைக்குத் திரும்பினார்.

Continue reading →

மிஸ்டர் கழுகு: கவர்னர் மிரட்டலால் அதிகாலை அட்டாக்!

மிழ்நாடு பெரும் புரட்சியைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது. இதை சமாளிக்கத் தெரியாமல் தமிழக அரசு திணறிக்கொண்டு இருக்கிறது” என்றபடியே கழுகார் வந்து குதித்தார்!
‘‘தலைநகர் சென்னை தொடங்கி தென் மண்டலமாம் மதுரை தாண்டியும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் கடந்த 10 நாட்களாக அமைதியான வழியில் நடந்து வந்தது. மாநில அரசு ஓர் அவசரச் சட்டத்தைத் தயாரித்து ஒரே நாளில் மத்திய அரசின் அனுமதியை வாங்கிவிட்டது. ஆனால், இதைப் போராட்டக்காரர்கள் ஏற்கவில்லை. அதாவது, அவர்கள் ஏற்கும்வகையில் இவர்களுக்குச் சொல்லத் தெரியவில்லை. அலங்காநல்லூரில்

Continue reading →

கனவு மெய்ப்படுமா?

னவு காணாத மனிதர்களே இல்லை. கனவுகள் மகிழ்ச்சியளிக்கக் கூடியவையாகவோ அச்சுறுத்தக்கூடியவையாகவோ இருக்கலாம். மனித இனத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது, பல்வேறு அதிர்ச்சியளிக்கும் சம்பவங்களுக்குக் காரணமாகவும் பல தீர்க்கதரிசனங்களை முன்அறிவிப்பதாகவும் கனவுகள் இருந்திருக்கின்றன. இந்த நிகழ்வுகள், கனவு என்றால் என்ன? அது சொல்ல வரும்

Continue reading →

மெடிக்ளெய்ம்… தவறான நம்பிக்கைகளை களைவது எப்படி?

டந்த பத்து ஆண்டுகளில், சந்தையில் கிடைக்கப் பெறும் காப்பீட்டுத் திட்டங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. எந்தவொரு நபருக்கும் ரிஸ்க் இல்லாத வாழ்க்கையை வாழும் எண்ணமே இருக்கும். தனது குடும்பத்துக்கான முழுமையான காப்பீட்டுத் திட்டத்தைப் பெற அனைவரும் விரும்புவார்கள் என்றாலும், அதிகப்படியான தேர்வுகள் கிடைக்கப் பெறுவது குழப்பங்களுக்கே வழிவகுக்கிறது. எனவே, திட்டங்கள், பாலிசிகள், உத்தரவாதங்கள், பிரீமியம்கள் என பல்வேறு அம்சங்களைக் கருத்தில்கொண்டு சரியான முடிவினை மேற்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.

கவர்ச்சிகரமான பாலிசிகள் உஷார்!

Continue reading →