விரல்களை வலிமையாக்கும் 2 நிமிடப் பயிற்சிகள்..
எழுதுவது, ஓவியம் வரைவது, கம்ப்யூட்டரில் டைப் செய்வது, பொருட்களைப் பிடிப்பது, எடையைத் தூக்குவது என அனைத்துக்குமே பயன்படக்கூடியவை கைவிரல்கள். அத்தகைய கைவிரல்களை வலிமையாக்குவது, பராமரிப்பது நம் வேலைகளை சுலபமாக்கும். கை வலி, விரல் வலி ஆகியவற்றை வராமல் தடுக்கும். இதோ, நமக்கான 2 நிமிட ஈஸி பயிற்சிகள்…
கைமூட்டு தளர்வு பயிற்சி (Fist flexes)
ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சையால் இவ்வளவு பலன்களா..!?
இன்று உலக அளவில் பிரபலமாகிவிட்டது, நம் பாரம்பர்ய ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை. அந்தக் காலத்தில், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பார்கள். அதனாலேயே நோய்களை அண்டவிடாமல், மருந்து சாப்பிடாமல் நிம்மதியாக நகர்ந்தது அவர்கள் வாழ்க்கை. ஆனால், இந்தக் காலத்தில் பலரும் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதுகூட இல்லை. சிறு வயதிலேயே மூட்டுவலி தொடங்கி வரிசைகட்டுகின்றன நோய்கள்… குழந்தைப்பேறின்மை எனத் தொடர்கின்றன பிரச்னைகள். இவற்றுக்கெல்லாம் ஆயுர்வேத எண்ணெய் சிகிச்சை முறையில் அற்புதமான தீர்வுகள் கிடைக்கும் என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.
எண்ணெய் சிகிச்சை என்றால் என்ன…
மருத்துவ சிகிச்சையோடு பிஸியோதெரபியும் அவசியம்!
தசைகள், நரம்புகள் மற்றும் எலும்பு பகுதிகளில் நோயாளிகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு மருத்துவ சிகிச்சையோடு, பிஸியோதெரபி பயிற்சிகளையும் இணைத்து தருவது அவசியம். அப்போதுதான் விரைவில் குணமடைய முடியும்’’ என்கிறார் நரம்பியல் இயன்முறை மருத்துவர் மணிவேல். பிஸியோதெரபியில் இருக்கும் வகைகள், அவை எப்போது தேவைப்படும் என்பதைத் தொடர்ந்து கூறுகிறார்.
சீரகம் இருக்க சிரமம் ஏன்?
அன்றாட உணவில் சேர்த்து வரும் வாசனை மிகுந்த மசாலா பொருளான சீரகம், உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். அதிலும் தினமும் சீரகத்தை தொடர்ந்து எடுத்து வந்தால், 20 நாட்களில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
தினமும் சீரகத்தை சேர்த்துக்கொண்டால், உடல் மெட்டபாலிசம் அதிகரித்து, செரிமானம் சீராகி, கலோரிகள் வேகமாக எரிக்கப்படும். அதுமட்டுமின்றி, சீரகம், வேறு பல நன்மைகளையும் உள்ளடக்கியது.
சீரக தண்ணீர்
ஆபரேஷன் 2.0 கலக்கும் ரோபோட்டிக் சர்ஜரி
தொழில்நுட்பம்தான் எத்தனை வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. காலம்தான் எத்தனை விதமாக மாறிக்கொண்டிருக்கிறது. ரோபோக்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றன என்றார்கள். ரோபோக்கள் சமையல் செய்கிறது என்றார்கள். ரோபோக்கள் கார் ஓட்டுகிறது என்றார்கள். சமீபகாலமாக ரோபோக்கள் மருத்துவத்துறையிலும் வந்து விட்டது
ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு..
ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி துவங்கியது. இந்த தடுப்பூசி திட்டம் வருகின்ற 28-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் 15 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும்’ என்றார்.
சசிகலா நியமனம்; தேர்தல் கமிஷன் முடிவு என்ன? பதைபதைப்போடு காத்திருக்கும் தினகரன்
பன்னீர்செல்வம் கோஷ்டியினர் கொடுக்கும் நெருக்கடி தாங்க முடியாமல், அ.தி.மு.க.,வின் துணைப் பொதுச் செயலர் தினகரன் நிம்மதி இழந்து தவிப்பதாக, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.அக்கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:சசிகலா ஜெயிலுக்குப் போனதால், திடுமென கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டு, அன்றைய தினமே, கட்சியின் துணைப் பொதுச் செயலர் ஆனவர், சசிகலாவின் அக்கா மகன் தினகரன். அவர் தலைமையில்தான், இன்று, அ.தி.மு.க.,வே இயங்கி வந்தாலும், அவர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை கண்காணித்துக் கொண்டும், கட்சி நிர்வாகத்தை கவனிப்பதையும் செய்து வருகிறார். நிம்மதி இழந்த தினகரன் இதில், கட்சி நிர்வாகத்தை கவனிப்பதில் அவருக்கு கடும் நெருக்கடிகள் ஏற்படுகிறது.
சத்து தரும் புடலங்காய்
தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது புடலங்காய். புடலங்காயை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்று பொருமல் நீங்கும். வயிற்று பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையது என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான்.
இடிமா என்கிற இடைஞ்சல்
ம் கண் கேமரா என்றால் அதில் உள்ள ரோல்தான் விழித்திரை. அதன் மையப்பகுதிதான் மேகுலா. அதன் வழியாகத்தான் நாம் எழுதுகிறோம், படிக்கிறோம். இடிமா என்றால் திரவக் கோர்வை. அதாவது தண்ணீர் சேர்வது என அர்த்தம். உடலின் எந்தப் பகுதியில் தண்ணீர் சேர்ந்தாலும் அதன் பெயர் இடிமாதான். விழித்திரையின் மையப்பகுதியான மேகுலாவில் தண்ணீர் சேர்வதற்குப் பெயர் மேகுலர் இடிமா(Macular Edema). இதற்கு பல காரணங்கள் உண்டு.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுபோகும்!
மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும், விடுமுறை நாள் வராதா? ஒரு நாள் முழு ஓய்வு கிடைக்காதா? என எண்ணும் அளவுக்கு, நவீன உலகம் மாறி விட்டது. தினமும், வீட்டில் இருப்பவர்களிடமே முழுமையாக இரண்டு வார்த்தை பேச நேரமில்லாமல், பம்பரமாய் சுற்றுகிறோம். ஒரே வீட்டுக்குள் இருந்தும், ‘ஷிப்ட்’ அடிப்படை வேலையால், அண்ணனும், தங்கையும் பார்த்தே, ஒரு வாரமாகி விடுகிறது.