Advertisements

Daily Archives: பிப்ரவரி 1st, 2017

முன்னேற்றத்தை நோக்கி… *விவசாய கடனுக்கு மட்டும் ரூ.10 லட்சம் …

புதுடில்லி: இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட், நாட்டை முன்னேற்றத்தை நோக்கி வழி நடத்துவதற்கானாதாக இருக்கிறது. இஷ்டத்திற்கு நிதி பெற்று, கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் அரசியல் கட்சிகளுக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது. இனிமேல் கன்னாபின்னாவென்று நிதியை பெற்று குவிக்க முடியாது. நாட்டின் முதுகெலும்பு என கூறப்படும் விவசாய துறைக்கும், வறுமை ஒழிப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்புகள் வளர்ந்தால் தான் ஒரு நாடு வளரும். எனவே, கட்டமைப்பு, ரயில்வே, சாலை மற்றும் போக்குவரத்து துறைகள் மேம்பாட்டுக்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. கல்விக்கான ஒதுக்கீடும் அதிகரித்துள்ளது.

Continue reading →

Advertisements

மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும் பீர்க்கங்காய்

நாம் உண்ணும் அன்றாட உணவில், காய்கறிகளே அதிக முக்கியத்துவம் வகிக்கின்றன. காய்கறிகளில், ஊட்டச்சத்து உள்ளதாகவும், ஜீரணத்துக்கு ஏற்றதாகவும் இருப்பதோடு, நோயின்றி ஆரோக்கியத்துடன் வாழ காய் உணவுகள் வழி செய்கின்றன. காய்கறிகளில், நீர் சத்துள்ள காய்களை சாப்பிடுவதுதான் மிகவும் நல்லது. இதில் குறிப்பாக, பீர்க்கங்காய் மிகச்சிறந்த, மருத்துவ குணம் கொண்ட காயாகும்.

Continue reading →

க்ளவ்ட் கட்டமைப்பும் சேவையும்

இன்றைய டிஜிட்டல் உலகில், பலருக்கும் அருமருந்தாய் அமைந்திருப்பது, ‘க்ளவ்ட் கம்ப்யூட்டிங்’ (Cloud Computing) என்னும் கட்டமைப்-பாகும். இதன் பயனை அனுபவிக்காதவர்கள் மற்றும் தெரிந்து கொள்ள முயற்சிக்காதவர்களே, இது நமக்குத் தேவையில்லை என ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால், இதன் பயனை அனுபவித்தவர்கள், இது குறித்து முழுமையாக அறிந்து கொண்டு, தங்களுக்கேற்ற க்ளவ்ட் சேவையைத் தேர்ந்தெடுத்து அமைத்துப் பயன் பெறுகின்றனர். அண்மைக் காலங்களில், தனி நபர்களே, தங்களுக்கென ஒரு க்ளவ்ட் சர்வரை அமைத்து, தங்களின் பைல்களை சேமித்து வைத்து, தங்களின் அரிய உழைப்பினைக் காப்பாற்றிக் கொள்கின்றனர். இத்தகைய க்ளவ்ட் சேவையின் கட்டமைப்பு மற்றும் பயன்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

க்ளவ்ட் அறிமுகம் Continue reading →