Daily Archives: பிப்ரவரி 6th, 2017

‛சதிக்கூட்டத்தின் தலைவியே சசிகலா தான்’

கிருஷ்ணகிரி: ‛‛ போயஸ் கார்டனில் இருந்து சசிகலா உடனே வெளியேற வேண்டும். அவரை முதல்வராக தேர்ந்தெடுத்த முடிவை அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்,” என, முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

மன்னிப்பு கடிதம்

Continue reading →

சசிகலா பதவியேற்பு விழா ஒத்திவைப்பு

சென்னை: சசிகலாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைக்க கவர்னர் வித்யாசாகர் ராவ் விரும்பவில்லை. இதனால், நாளை (செவ்வாய் கிழமை) நடைபெறுவதாக இருந்த பதவி ஏற்பு விழா ஒத்தி வைக்கப்பட்டது.
அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வாகி உள்ள சசிகலா நாளை (செவ்வாய் கிழமை) தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. சென்னை பல்கலை.,யில் நடைபெற இருந்த பதவியேற்பு விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைப்புகான காரணம்:

Continue reading →

ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? டாக்டர்கள் குழு பேட்டி

சென்னை: ‛சென்னை அப்பல்லோ மருத்துமனைக்கு முதல்வர் ஜெயலலிதா சுயநினைவுடன் தான் வந்தார்; தேர்தல் ஆவணங்களில் சுயநினைவுடன் தான் கைரேகை வைத்தார்’ என, அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே மற்றும் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் டாக்டர்கள் இன்று அளித்த பேட்டி:

சுயநினைவுடன் இருந்தார் :

Continue reading →

நிதிநிலை அறிக்கையில் பிராட்பேண்ட் இணைப்பு

இந்தியாவிற்கான வர இருக்கும் நிதி நிலை அறிக்கையில், பிராட்பேண்ட் இணைப்பிற்கான சலுகைகள் அதிகம் இருக்க வேண்டும் என, இந்தப் பிரிவைக் கண்காணித்து வரும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வரும் மார்ச் மாதத்தில், இந்தியாவில், 25% நகர மக்களும், 4% கிராம மக்களுமே பிராட்பேண்ட் இணைய இணைப்பினைக் கொண்டிருப்பார்கள். பிராட்பேண்ட் இணைப்பு பெற்ற பயனாளர்களில், 75% பேர் நகரங்களில் வசிக்கின்றனர். நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், 4.1% பங்கு, பிராட்பேண்ட் இணைய இணைப்பினால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில், அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி, இதன் வளர்ச்சிக்கு வழி வகுக்க வேண்டும் என இத்துறை சார்ந்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 29 லட்சம் சதுர மீட்டரில் வாழும் 130 கோடி மக்களை இணைக்க, பிராட்பேண்ட் இணைப்பு அவசியம் என்பதுவும் உறுதியாகிறது.

Continue reading →

புது அம்மாக்கள் கவனம்! – பச்சிளம் குழந்தையைக் கையாள்வது எப்படி?

ன்றையச் சூழ்நிலையில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவிட்டன. தனிக்குடும்ப அம்மா, அப்பாக்களுக்கு, குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் சிரமமானதாக ஆகிவிட்டது. குறிப்பாக, குழந்தை பிறந்த ஆரம்ப வாரங்களில், அதன் அழுகை முதல் பசி வரை அனைத்துமே, இளம் பெற்றோர் காரணம் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் குழப்பம், பதற்றம் தருவதாகவே இருக்கும்.
பிரசவத்துக்குப் பின், மருத்துவமனையில் இருந்து தாயும்சேயும் வீடு திரும்பும் அந்த ஆரம்ப நாட்களில், பச்சிளம் குழந்தையைக் கையாள்வதில் அதிக கவனம் தேவை. குழந்தை உலகுக்கு வந்தபின் அது, தன் தாயையே தனக்கான உயிராக முதலில் பற்றும். ஆனாலும், அப்பா, வீட்டுப் பெரியவர்கள் என அனைவரும் குழந்தை வளர்ப்பில் தங்களின் பங்கை அளித்து, இரவு, பகல் எனத் தாய் மட்டுமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு, குழந்தையின் தேவைகளை, அதன் அழுகை, செய்கையில் இருந்து அறிந்துகொள்ளப் பழக வேண்டும். குழந்தையின் தாய், தந்தைவழிப் பாட்டிகள், குழந்தையின் பெற்றோரை வழிநடத்த வேண்டும்.
தேவையான அளவு பால் சுரப்பு

Continue reading →

உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமான ஜீன்கள்!

உயர் ரத்த அழுத்தத்தோடு தொடர்புடைய, 107 மரபணுக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.பிரிட்டனில் செயல்படும், ‘பயோபேங்’ என்ற திட்டத்தில் பங்கேற்ற, நான்கு லட்சம் பேருக்கு மேற்பட்டோரிடம் மேற்கொண்ட மரபணு முடிவில் இந்த கண்டுபிடிப்பு சாத்தியமாகியுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட

Continue reading →

அ.தி.மு.க.வின் பொதுசெயலாளர் பதவி முதல் முதலமைச்சர் தேர்வு வரை… என்ன நடந்தது?

ன்று அ.தி.மு.க., கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அந்தக் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஒ.பன்னீர்செல்வம் தனது முதலைமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, சசிகலா முதலமைச்சர் பொறுப்பேற்று கொள்வதற்கும் முன்மொழிந்துள்ளார்.

Continue reading →