டிஜிட்டல் செய்திகள்

வர இருக்கும் விண்டோஸ் 10 இயக்கத்திற்கான மேம்படுத்தலில், மைக்ரோசாப்ட் மின் நூல் விற்பனை மையம் ஒன்றை உருவாக்கித் தர இருக்கிறது. எட்ஜ் பிரவுசரில் இந்த மையம் இயங்கும். இதன் வழி, பயனாளர்கள், மின் நூல்களாக வடிவமைக்கப்பட்ட கோப்புகளை, கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இது, விண்டோஸ் 10 மொபைல் சிஸ்டத்திலும் தரப்படும். கல்வி பிரிவில் மைக்ரோசாப்ட் தரும் ஆக்கபூர்வ நிலையாக இது இருக்கும்.

இதுவரை, மைக்ரோசாப்ட், தன் ஸ்டோர் மூலமாக, அப்ளிகேஷன் புரோகிராம்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி படங்கள், இசைக் கோப்புகளை விற்பனை செய்து வருகிறது. புதிதாக அமைய இருக்கும் இந்த மின் நூல் மையம், அமேசான் நூல் விற்பனை மையத்திற்குப் போட்டியாக அமையலாம்.
விண்டோஸ் 10 மேம்படுத்தல் : 2015 ஜூலை 29ல் விண்டோஸ் 10 வெளியானது. அடுத்த ஆண்டு மேம்படுத்தல் ஆகஸ்ட் 2, 2016ல் தரப்பட்டது. நவம்பர் மேம்படுத்தல் என்ற வகையில், நவம்பர் 12, 2016ல், விண்டோஸ் 10 மீண்டும் மேம்படுத்தப்பட்டது. வரும் 2017 ஏப்ரல் மாதம், புதிய மேம்படுத்தல் தரப்பட இருக்கிறது. இந்த வகையில் மேம்படுத்தப்படும் கோப்புகள் தொடர்ந்து வழங்கப்படும்.
இந்த மேம்படுத்தல் கோப்புகள் அனைத்தும் மொத்த தொகுதியாகவே வழங்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு நாளில் வெளியிட்ட மேம்படுத்தலை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யவில்லை என்றாலும், இறுதியாக வெளியிடப்பட்டு வழங்கப்படும் மேம்படுத்தல் கோப்பில், முந்தைய கோப்புகளும் இணைந்தே தரப்படுகின்றன. எனவே, இறுதியாக மைக்ரோசாப்ட் அப்டேட் இணைய தளத்தில் வழங்கப்படும் மேம்படுத்தலை மேற்கொண்டால், விண்டோஸ் 10 அண்மைக் காலத்தியதாக அமைந்துவிடும்.
ஆப்பிள் நிறுவனம், புதியதாக மூன்று ஐபேட் சாதனங்களையும், பென்சில் 2 ஸ்டைலஸ் டூலையும் (Pencil 2 stylus), இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தும் எனத் தெரிகிறது. இவை 9.7, 10.5 மற்றும் 12.9 அங்குல அளவில் இருக்கும். முதலில் உள்ள 9.7 ஐபேட், கல்வி கற்போருக்கான, தொடக்க நிலை ஐபேட் ஆக இருக்கும். முதல் மூன்று மாத காலத்தில், முதல் நிலை ஐபேட் சாதனமும், அடுத்த இரண்டும், அடுத்த மூன்று மாத காலத்திலும் அறிமுகமாகலாம். இவற்றுடன் பென்சில் 2 ஸ்டைலஸ் இணைத்து வழங்கப்படலாம். இதனை விழாமல் இணைத்திட, ஐபேட் சாதனத்தில் காந்தப் பிடிப்பு ஏற்படுத்தப்படலாம்.
விண்டோஸ் 10ல் இயங்கும் வைபர் செயலி, அண்மையில் பதிப்பு v6.6 ஆக மேம்படுத்தப் பட்டுள்ளது. மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வழி தரும் இடை முகத்தில், பல புதிய ஆப்ஷன்கள் – to send photo & video; take photo & video; send file (புதியது); share contact; send location (புதியது); hold & talk தரப்பட்டுள்ளன. இப்போது ஒரு போட்டோ மட்டுமே இணைக்க முடியும் என்ற நிலை மாற்றப்பட்டு, ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட போட்டோக்களை அனுப்ப வசதி தரப்பட்டுள்ளது. புதிய மேம்படுத்தலைப் பெற, விண்டோஸ் ஸ்டோர் சென்று பெற்றுக் கொள்ளலாம்.

%d bloggers like this: