கண் வீக்கத்தை தவிர்க்க…

கண் வீக்கத்திற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகமான வேலைப் பளு, கண் அழுத்தம் மற்றும் ஹார்மோன் குறைபாடுகள். மேலும், துாக்கமின்மை, கண் வீக்கத்தின் முக்கிய காரணமாகும். கண் சோர்வாக இருந்தால், புத்துணர்ச்சி இருக்காது. எனவே, பின்வரும் குறிப்புக்களை

பின்பற்றி, பிரச்னைகளை தவிர்க்கலாம்.குளிர்ந்த நிலையில் உள்ள தேநீர் பைகளை, கண்களின் மேல், 10 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருமுறை, இவ்வாறு செய்தால் போதும்.உருளைக்கிழங்கில் உள்ள எதிர்ப்பு சக்தியுடன் கூடிய மருத்துவ குணம், கண் வீக்கத்தை எளிதாக குறைக்கும். உருளைக்கிழங்கை வெட்டி, கண்களின் மேல், 10 நிமிடம் வைக்கலாம். வெள்ளரிக்காயிலுள்ள, ‘என்சைம்’ கண் வீக்கத்தை கட்டுப்படுத்தும். இதிலுள்ள மருத்துவ தன்மை,மிகுந்த பலன் அளிக்கும்.

%d bloggers like this: