Advertisements

எங்கேயோ வைத்த ஸ்மார்ட்போன் தொலைந்து விட்டதா??

நேரம் எப்போதும் ஒரு மாதிரி இருக்காது. ஆசை ஆசையாய் வாங்கிய ஸ்மார்ட்போன், ஏதோ ஞாபகத்தில் எங்கேயோ வைத்து தொலைந்து விட்டதா?
தொலைந்து போன பின் அதிக பதற்றம் கொள்ளாமல் நிதானமாக செயல்பட்டு அதனை கண்டுபிடிக்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த ஸ்மார்ட்போனினை கூகுள் உதவியுடன் எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

குறிப்பு: இந்த வழிமுறைகள் சரியாக வேலை செய்ய உங்களின் ஸ்மார்ட்போனில் நீங்கள் ஏற்கனவே கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருப்பது அவசியம் ஆகும்.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ்:
* தொலைந்து போன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை கண்டறிய, போன் தொலையும் முன்னரே உங்களது
ஸ்மார்ட்போனின் கூகுள் செட்டிங்-ஐ செயல்படுத்தி இருக்க வேண்டும்.

* மேலும் லொகேஷன் ரிபோர்டிங் ஆப்ஷன் (Location Reporting) அதிகமாக செட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் சரி பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது சாதனத்தை கண்டறிவது எளிமையாகி விடும்.

Advertisements
%d bloggers like this: