Advertisements

காய்கறி ஹேர் டை பயன்படுத்தினால் இவ்வளவு பலன்களா..?!

நரைமுடிக்கு டை அடிப்பது இருக்கட்டும்… கூந்தலை கலரிங் செய்வதுதான் இன்றைக்கு உலகம் முழுக்க ஃபேஷன் ட்ரெண்ட்! விருந்து, விழாக்களில் பல பிரபலங்கள் பளிச் தோற்றத்துக்காக மெனக்கெடுவது ஹேர் கலரிங் விஷயத்தில்தான். கறுப்பு, கிரே, சிவப்பு… என கூந்தலுக்கு தீட்டும் வண்ணங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு

நாளும் நீண்டுகொண்டே போகிறது. ஆனால், மார்க்கெட்டில் கிடைக்கும் ஹேர் கலர் க்ரீமால் கலரிங் செய்யும்போது முடிகள் வலுவிழந்து போகும்; உதிரவும் செய்யும். மேலும், அதிலுள்ள கெமிக்கல்கள் முடியின் வளர்ச்சியையும் பாதிக்கும். அதற்காகவே இயற்கையான முறையில் கலரிங் செய்வதற்கான வழிகளைப் பலரும் விரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, வெஜிடபிள் ஹேர் டை!

இதை எப்படிச் செய்வது… அதன் பலன்கள் என்னென்ன… விரிவாகப் பார்ப்போம்!

100 % ஆர்கானிக் சிவப்பு நிற ஹேர் டை

தேவையானவை:
சுத்தமான தேங்காய் எண்ணெய் – 1 கப்
பீட்ரூட் – 1/2
கேரட் – 1
தண்ணீர் – 1/2 கப்.

செய்முறை:
மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்துப் பொருட்களையும் மிக்ஸியில் நன்றாக க்ரீம்போல அரைத்துக்கொள்ளவும். பிறகு இதை ஹேர் டை பிரஷ்ஷால் தலை முடியின் வேர்ப் பகுதியில் இருந்து நுனிவரை ஒரே சீராக அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்கு தலை முடியில் சூரிய வெளிச்சம்படும்படி அமர்ந்துகொள்ளுங்கள். அதன் பிறகு, ஆர்கானிக் ஷாம்பூவால் தலையை அலசுங்கள். உங்கள் தலைமுடி மிருதுவாகவும் சிவப்பாகவும் இருக்கும்.

அடர் பழுப்பு நிற கூந்தலுக்கு ஹென்னா பேக்

தேவையானவை:
மருதாணிப் பொடி – 1 கப்
ஆலிவ் ஆயில் – 2 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
டீ ட்ரீ ஆயில் – 3 சொட்டுகள்
டீ டிகாக்ஷன் – 1/2 கப்.

செய்முறை:
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து மூன்று முதல் எட்டு மணி நேரத்துக்கு ஒரு பாத்திரத்தில் ஊறவைக்கவும். பிறகு இதைக் கூந்தல் முழுக்கத் தடவி, ஒரு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். கூந்தலில் நன்கு ஊறிய பிறகு குளிக்கவும். இதனால், உங்கள் முடி அடர் பழுப்பு நிறத்தில் பட்டுப்போல் மின்னும்.

செந்நிறக் கூந்தலுக்கு மாதுளம்பழச் சாறு பேக்!

தேவையானவை:
மாதுளை – 1, கண்டிஷனர் – தேவையான அளவு.

செய்முறை:

மாதுளை விதைகளை எடுத்து சாறாக்கி, அதை இரண்டு கப்பில் பிரித்து வைத்துக்கொள்ளவும். அதில் ஒரு கப் பழச் சாற்றை சிறிது நேரம் சுட வைக்க வேண்டும். பிறகு, நெச்சுரல் ஹேர் டை கண்டிஷனருடன் சூடாக்கிய மாதுளைச் சாற்றைக் கலந்து, தலைமுடியில் அப்ளை செய்யவும். சில நொடிகள் கழித்து, தனியாக எடுத்து வைத்திருக்கும் மாதுளம்பழச் சாற்றை மீண்டும் தலைமுடியில் தடவவும். 15 நிமிடங்கள் நன்கு தலையி ஊறிய பிறகு குளிக்கவும். செந்நிறத்தில் மினுங்கும் கூந்தல்!

கருமையான கூந்தலுக்கு காபி டை

தேவையானவை:
காபி டிகாக்ஷன் – 1 கப்
ஆப்பிள் சிடர் வினிகர் – 2 டீஸ்பூன்.

செய்முறை:
ஆப்பிள் சிடர் வினீகரை காபி டிகாக்ஷனில் நன்றாகக் கலந்துகொள்ளவும். முடியின் வேர் முதல் நுனி வரை தடவி, சுத்தமான சீப்பால் 50 முறை சீவவும். இதனால் எல்லா முடிகளுக்கும் சீராக ஹேர் டை பரவும். ஒரு மணிநேரம் கழித்து வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.
குறிப்பு: 24 மணி நேரத்துக்கு தலைக்கு ஷாம்பூவைப் பயன்படுத்தக் கூடாது.

பலன்கள்:

* காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் கலர், உங்கள் கூந்தலின் அமைப்பைப் பாதிக்காமல், எந்தப் பக்க விளைவையும் ஏற்படுத்தாமல் ஆரோக்கியமாகப் பாதுகாக்கும்.

* இந்த ஹேர் கலரில் உள்ள இயற்கையான பொருட்கள் கூந்தலுக்குச் சிறந்த கண்டிஷனராகச் செயல்படுவதால், கூந்தலை மிருதுவாகவும், பளபளப்பாகவும், உறுதியாகவும் மாற்றுகிறது.

* கர்ப்பிணிப் பெண்கள் செயற்கையான ஹேர் கலரை உபயோகித்தால், அதிலுள்ள ரசாயனங்கள் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆனால் இயற்கையான முறையில் வீட்டிலேயே காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஹேர் கலரால் கருவில் உள்ள குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

* பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் ஹேர் கலரை அடிக்கடி மாற்றுவது பிடிக்கும். இந்த இயற்கை ஹேர் டை நிரந்தரமானது அல்ல. பத்து முறை ஷாம்பூவால் கூந்தலை அலசினால், கூந்தலின் இயற்கையான நிறம் வந்துவிடும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: