Advertisements

கேன்சர் நோயல்ல… வியாபாரம்!

அதிர வைக்கும் மருத்துவ அரசியல்
‘பொதுமக்களிடம் இருக்கும் புற்றுநோய் அச்சுறுத்தலை வைத்து மருத்துவர்கள் மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். புற்றுநோய் என்பது வைட்டமின் B17-ன் குறைபாடுதான். அது ஒரு நோய் அல்ல’ என்று பூகம்பத்தைக் கிளப்பியிருக்கிறார் மெக்சிகன் பல்கலைக்கழக விரிவுரையாளரான எட்வர்ட் க்ரிஃபின். World without cancer என்ற தன்னுடைய புத்தகத்தில்தான் இந்த பரபரப்பை

உண்டுபண்ணியிருக்கிறார்.‘கடந்த காலத்தில் ஸ்கர்வி(Scurvy) எனும் நோய் கொத்து கொத்தாக மக்களைக் கொன்று குவித்தது. இதன்மூலம் பல பெரிய மருந்து நிறுவனங்கள் நல்ல லாபம் பார்த்தன. ஸ்கர்வி என்பது வைட்டமின் ‘C’ குறைபாடு என்பது தெரிய வந்த பிறகு மக்கள் விழித்துக் கொண்டார்கள். புற்றுநோய் விஷயத்திலும் மக்கள் அதேபோல் விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் இது.
B17 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சையோ, கீமோதெரபியோ தேவையில்லை’ என்றும் கூறி தன் கருத்துக்கு வலு சேர்க்கிறார் எட்வர்ட் க்ரிஃபின். (ஆப்பிள், ப்ளம்ஸ், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, ஏப்ரிகாட், தினை, பார்லி, ஆளி, முந்திரி, பாதாம்பருப்பு, இனிப்பு உருளை, மரவள்ளிக்கிழங்கு, ஸ்பினாக் போன்ற பச்சைக் கீரைகளில் இந்த வைட்டமின் பி 17 மிகுதியாக உள்ளது.)இந்த நூலை வேற்று மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு உடனடியாகத் தடைவிதித்திருக்கிறது அமெரிக்க அரசு. ‘ஆங்கில மருத்துவத்துக்கு எதிராக, மாற்று மருத்துவத்துக்கு ஆதரவான பார்வை எட்வர்ட் க்ரிஃபின் கருத்தில் உள்ளது’ என்ற சர்ச்சையும் மருத்துவ உலகில் எழுந்திருக்கிறது.ஆயுர்வேத மருத்துவர் சிவகுமாரிடம் இது பற்றிப் பேசினோம்…‘‘மனித உடலில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை எதையும் விட்டு வைக்காமல் தாக்குவதாகப் புற்றுநோய் உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய்கள் முன் அறிகுறியே இல்லாமல் தாக்குவதும் உண்டு. ஆனால், பெரும்பாலான நோய்கள் எட்வர்ட் க்ரிஃபின் சொல்லியிருப்பதைப் போல சாதாரணமாகவே ஆரம்பிக்கிறது.
ஆரம்பத்தில் வாயுக்கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலி அடுத்து அல்சராகவும் அதற்கு அடுத்த நிலையான வயிறு தொடர்பான புற்றுநோயிலும் முடியும். அதுபோல ரத்தப்புற்றுநோயின் தொடக்கக் காரணிகளில் ஒன்றாக ரத்தசோகை இருக்கிறது.ஆயுர்வேதத்தில் ‘அற்புதம்’ என்கிற தலைப்பில் முழுவதுமாக புற்றுநோய்க்கான அறிகுறிகள், சிகிச்சைகள், மருந்துகள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் போன்றவற்றின் ஏற்றத்தாழ்வுகளே அனைத்து சாதாரண நோய்கள் முதல் புற்றுநோய் வரையிலான பெரிய நோய்களுக்குக் காரணமாகிறது என்பதையும் ஆயுர்வேதம் தெளிவாகக் கூறியிருக்கிறது.
உணவு, சுற்றுச்சூழல், மனம் இந்த மூன்று விஷயத்திலும் கவனமாக இருந்தாலே புற்றுநோய் நம்மை அண்டாது என்பதே முன்னோர்களின் சித்தாந்தம். ‘வருமுன் காப்போம்’ என்ற ரீதியில் வாழ்வியல் நடைமுறைகள், பழக்க வழக்கங்கள், உணவுக்கட்டுப்பாடுகள் இருக்கின்றன. எந்தெந்த உணவை எந்தெந்த பருவகாலத்தில் உண்பது, எந்த உணவோடு எதைச் சேர்த்து உண்ணக்கூடாது என உணவுக்கான விதிமுறைகளெல்லாம் நம் மருத்துவத்தில் பட்டியலிட்டு வைத்திருக்கிறார்கள்.
மூன்று வேளைக்குமேல் சாப்பிடுபவன் ரோகி என்றும், வாரம் ஒருமுறை எண்ணைய் குளியல் அவசியம் என்றும், உடலைச் சுத்தம் செய்ய பேதி மருந்து போன்றவை அவசியம் என்பதையும் நம்மவர்கள் கூறியிருக்கிறார்கள்.  இருமல், தும்மல், மலம், சிறுநீர் மற்றும் விந்து வெளியேற்றம் போன்றவற்றை அடக்கக்கூடாது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.இதுபோல் பல்வேறு வாழ்வியல் நடைமுறைகள் இந்திய மருத்துவத்தில் வகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதுபோல் நியதிகளைக் கடைப்பிடிக்காமல் வாழும்போதுதான் நோய்கள் வருகிறது. நோய்கள் வரும்போது அதற்கான சிகிச்சை களையும் அடுத்த கட்டமாகச் சொல்கிறார்கள்.ஒரு நோய் எவ்வளவு தீவிரமான நிலையில் இருந்தாலும் பாதிப்புத் தன்மையையைக் குறைக்க முடியும் என்பதையே ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆங்கில மருத்துவத்தில் பெரும்பாலும் தற்காலிகத் தீர்வுகளையே கொடுக்கிறார்கள். இப்போதைக்கு இந்த நோயிலிருந்து தப்பித்தால் போதும் என்று மக்களும் நினைக்கிறார்கள்.
இதனால்தான் பல நோய்கள் வாழ்நாள் முழுவதும் தீராத நோய்களாக இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் சிகிச்சை எடுத்துக் கொண்டே இருக்கும் நிலையையும் உண்டுபண்ணுகின்றன. ‘நோய்நாடி நோய் முதல்நாடி’ என்பதற்கிணங்க நோயின் மூலாதாரத்தைக் கண்டறிந்துபிரதான நோயை குணப்படுத்த முடியும். புற்றுநோய் என்பது வைட்டமின் பி 17 குறைபாடு என்று சொல்லும் எட்வர் க்ரிஃபின் கருத்து அலட்சியப்படுத்தக் கூடியதல்ல’’ என்கிறார் சிவகுமார்.எட்வர்ட் க்ரிஃபின் கருத்தை வழிமொழிவதுடன் புற்றுநோய் சிகிச்சையில் ஆங்கில மருத்துவத்தில் இருக்கும் பிரச்னைகளையும் சித்த மருத்துவத்தில் இருக்கும் சாதகமான அம்சங்களையும் கூறுகிறார் சித்த மருத்துவர் திருநாராயணன்.‘‘ஆங்கில மருத்துவத்தில் புற்றுநோய் பாதித்த உறுப்பின் பகுதியிலிருந்து கொஞ்சம் சதையை அறுத்து எடுத்து, பயாப்சி முறையில் பரிசோதனை செய்து பார்க்கிறார்கள். அதன் பின்னர்தான் சிகிச்சையைத் தொடர ஆரம்பிக்கிறார்கள்.
ஆனால், இந்த பரிசோதனை செய்வதற்குள்ளாகவே நோய் தீவிரமாக உடலில் பரவ ஆரம்பித்து விடுகிறது. குறிப்பாக உடலில் ஜீரண மண்டலங்கள், தலைமுடி போன்ற சில குறிப்பிட்ட இடங்களில் திசுக்கள் மிகவேகமாக வளரக்கூடியவை.
புற்றுநோயால் பாதித்த செல்கள் சாதாரண செல்களைக் காட்டிலும் வேகமாகப் பரவக்கூடியது என்பதால் இந்த செல்களை உடனடியாக அழிக்க கீமோதெரபி ஊசி செலுத்தும்போது அந்த மருந்தானது ஜீரண மண்டலம், தலைமுடி போன்ற இடங்களில் வளரும் நல்ல திசுக்களையும் தாக்கி தலைமுடி உதிரத் தொடங்குகிறது.
ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுவதால் நோயாளிகளுக்கு வாந்தி ஏற்படுகிறது. இதேபோல், ஆண் விறைப்பை திசுக்களும், பெண் சினைப்பை திசுக்களும் வேகமாக வளரக்கூடியவை என்பதால் கீமோதெரபியில் செலுத்தப்படும் மருந்து ஆண் என்றால் உயிரணு உற்பத்தியையும், பெண்என்றால் சினைமுட்டை உற்பத்தியையும் பாதிக்கிறது.கீமோதெரபி மருந்துகளால் ஈரல், சிறுநீரகம், இதயம் போன்றவையும் நெருக்கடிக்குள்ளாகிறது. கீமோதெரபி மற்றும் ரேடியேஷன் சிகிச்சை முறை மேற்கொள்ளும்போது நோயாளிகளுக்கு தாங்கமுடியாத தலைவலி, தசைவலி, வயிற்றுவலி, தோலில் மாற்றம், உடல் எடை மாற்றம், ரத்தம் உறைதல் போன்ற எண்ணற்ற பக்க விளைவுகளும் உண்டாகிறது. மார்பகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் வந்த பெண்கள் இவற்றை இழக்க நேரிடும்போதும் மனரீதியாகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
கீமோதெரபியில் விலங்குகளிடமிருந்து எடுக்கப்படும் மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. ஆனால், சித்த வைத்தியத்தில் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் மருந்துகளே கொடுக்கப்படுகிறது. தேராங்கொட்டை, தாளித்த பத்திரி, நீரடி முத்து, வல்லாதகி போன்ற அந்தந்த பருவகாலங்களில் கிடைக்கும் மூலிகைகள் மற்றும் தனிப்பட்ட ஒருவரின் வாதம், பித்தம், கபம் போன்றவற்றின் சமநிலைக்கேற்ப கொடுக்கப்படும்.இதுதவிர, உணவே மருந்து என்று சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. துளசி, மஞ்சள், வில்வம், லவங்கப்பட்டை, மிளகு, கொத்தமல்லிவிதை, இஞ்சி, கறிவேப்பிலை போன்றவற்றை மருந்தாக எடுத்துக் கொள்ளும்போது இவைகளே ஆன்டி ஆக்சிடென்டாக வினைபுரிந்து புற்றுநோய் செல்களின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் பக்க விளைவில்லாத இந்த மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
மேலும், நோயாளிகளுக்கு யோகா, பிராணாயாமம், தியானம் போன்ற வாழ்வியல் படிப்பினைகளும் சொல்லித்தரப்படுவதால் இயல்பான வாழ்க்கையை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களும் வாழமுடிகிறது. இதனால் அவர்கள் உளவியல்ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாவதில்லை.நாம் உண்ணும் உணவு, வாழ்க்கைமுறை என எல்லாவற்றிலும் அயல்நாட்டினரை பின்பற்றுவதால் அயல்நாட்டு மருத்துவத்துக்கும் நாம் அடிமையாகிவிட்டோம். இதைப் பயன்படுத்திக்கொண்டுதான் அயல்நாட்டு மருந்து கம்பெனிகள் லாபம் சம்பாதிக்கின்றன” என்கிறார்.ஆங்கில மருத்துவத்தில் வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் ராமநாதன்.‘‘இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஆங்கில மருத்துவத்தில் எல்லாவகைப் புற்றுநோய்களுக்குமே தடுப்பு மருந்துகள் வந்துவிட்டன.
இதனால் புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் வெகுவாகக் குறைந்திருக்கிறது. 70 சதவீத புற்றுநோய்கள் குணப்படுத்தக்கூடியவை என்பதையே ஆங்கில மருத்துவம் சொல்கிறது; அப்படியே செய்கிறது.உதாரணத்துக்கு பெண் குழந்தைகள் திருமண வயதை எட்டும்போதே கர்ப்பப்பை புற்றுநோய் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதனால் கர்ப்பப்பை புற்றுநோய் வராமல் தவிர்த்துவிட முடியும்.அதேபோல் மார்பகப் புற்றுநோயை யும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் ஆரம்ப கட்டத்திலேயே நோயின் தீவிரத்திலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள புரட்சியால் புற்றுநோய் மருத்துவத்தில் முன் எப்போதையும் விட மேம்பட்ட சிகிச்சைகள் வந்து விட்டன என்பதே உண்மை” என்கிறார்.அலோபதி, சித்தா, ஆயுர்வேதா என்று சிகிச்சை முறைகள் எதுவாகஇருந்தாலும், அது வியாபாரமாக இல்லாமல் மக்களுக்கான மருத்துவமாகஇருந்தால் சரிதான் !

நன்றி குங்குமம் டாக்டர்

Advertisements
%d bloggers like this: