Advertisements

ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிப்பு..

ரூபெல்லா தடுப்பூசி திட்டம் தமிழகத்தில் கடந்த 6-ம் தேதி துவங்கியது. இந்த தடுப்பூசி திட்டம் வருகின்ற 28-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் மேலும் 15 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தில் இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் 15 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும்’ என்றார்.

Advertisements
%d bloggers like this: