Advertisements

ஜெ., கீழே தள்ளப்பட்டார்: பி.எச்.பாண்டியன் ‛திடுக்’

சென்னை: ‛‛மறைந்த முதல்வர் ஜெயலலிதா, வீட்டில் கீழே தள்ளப்பட்டார். அதன் பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என, அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது,” என, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

டிஸ்சார்ஜ் அறிக்கை:


சென்னையில், இன்று (மார்ச் 2) பி.எச்.பாண்டியன் கூறியதாவது: சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ., மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் டிஸ்சார்ஜ் அறிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதில் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு செப்., 22ல் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். அதன் பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் வீட்டிலும், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன.
ஜெ., சிகிச்சைக்காக அங்கு சேர்ந்த பிறகு, 27 கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, போயஸ் கார்டன் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும்.
ஜெயலலிதாவின் உயிர் இயற்கையாக பிரியும் வகையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த அனுமதி அளித்தவர் யார்?. குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் அந்த அனுமதி அளித்தது ஏன்?. 2016 மே, ஜூன் மாதத்தில், சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சேர்க்க வசதியாக, சென்னைக்கு பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை அனுப்பியதாக மத்திய அரசின் ரகசிய தகவல் கூறுகிறது. அந்த முயற்சியை தடுத்தது யார்?. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் அறிக்கையை இன்னும் வெளியிடாதது ஏன்?
இவ்வாறு பி.எச்.பாண்டியன் கூறினார்.

கன்னத்தில் நான்கு ஓட்டைகள்

அவரது மகன் மனோஜ் பாண்டியன் கூறியதாவது:
ஜெயலலிதாவுக்கு இகோமோ உள்ளிட்ட முக்கிய சிகிச்சைகள் அளிக்க அனுமதி அளித்தது யார். இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ஜெயலலிதாவின் உணவு வகைகளை ஆய்வு கூட பரிசோதனைக்கு பிறகே தர வேண்டும். எனவே, மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்ற போது, அவருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளின் ஆய்வு கூட பரிசோதனை அறிக்கையை வெளியிட வேண்டும். நவ.2 முதல், டிச., 5 வரை வெளிநாட்டு டாக்டர்கள், உள்நாட்டு டாக்டர்கள் யாரும் ஜெ.,வை சந்திக்க வராதது ஏன்? அவரது கன்னத்தில் நான்கு ஓட்டைகள் ஏற்பட்டது எப்படி? இதற்கெல்லாம் விளக்கம் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements
%d bloggers like this: