அமெரிக்க வேலை… அமெரிக்க மாப்பிள்ளை… இனி கனவா?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள், இந்தியப் பெண்களின் என்.ஆர்.ஐ மாப்பிள்ளை கனவிலும் கைவைத்துள்ளன. தனது தேர்தல் வாக்குறுதியில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று முழங்கிய ட்ரம்ப், அதைச் செயல்படுத்தும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இவை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்து படிக்கிற, பணிபுரிகிற நபர்களின் இடையே பீதியைக் கிளப்பியுள்ளன.
அது என்ன ஹெச்1பி விசா?
திருஷ்டிக்கு மட்டுமல்ல…!
பூசணிக்காயில், சர்க்கரைபூசணி, வெண்பூசணி என இரு வகை உண்டு. இரண்டு பூசணிகளுமே, உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. திருஷ்டி கழிக்கவும் பூசணியைப் பயன்படுத்தி வருகிறோம்.
அதிகமான பித்தத்தை நீக்கக்கூடியது. வெண்பூசணியின் முற்றிய காய்கள் தலைவலியைப் போக்கவும், நெஞ்சு சளியை நீக்கவும், மூச்சிரைப்பைப் போக்கவும், சிறுநீரகக் கோளாறுகளை அகற்றவும் பயன்படுகிறது.
நாடாப்புழுக்களை வெளியேற்றும் புழுக்கொல்லியாகவும், இந்த முற்றிய காய் பயன்படுகிறது.
வெண்பூசணியின் விதையிலிருந்து, பல மருத்துவ வேதிப்பொருட்கள் பிரித்தெடுக்கப் படுகின்றன.