Advertisements

அமெரிக்க வேலை… அமெரிக்க மாப்பிள்ளை… இனி கனவா?

மெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்புகள், இந்தியப் பெண்களின் என்.ஆர்.ஐ மாப்பிள்ளை கனவிலும் கைவைத்துள்ளன. தனது தேர்தல் வாக்குறுதியில் அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு என்று முழங்கிய ட்ரம்ப், அதைச் செயல்படுத்தும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இவை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் அவை சார்ந்து படிக்கிற, பணிபுரிகிற நபர்களின் இடையே பீதியைக் கிளப்பியுள்ளன.

அது என்ன ஹெச்1பி விசா?


வெளிநாடுகளில் இருந்து வேலை தொடர்பாக அமெரிக்கா செல்பவர் களுக்கு இந்த விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் கிளை நிறுவனங்களை அமைத்துச் செயல்படும்போது, இங்குள்ள பணியாளர்களைத் தற்காலிகமாக  அமெரிக்கா அனுப்புவதற்காக  ஹெச்1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவுக்கு கடந்த ஆண்டு மட்டும் 2.6 லட்சம் இந்தியர்கள் விண்ணப்பித்துள்ளனர். ஒபாமா ஆட்சிக் காலத்தில், கடந்த 2014-ல் ஒட்டுமொத்த ஹெச்1பி விசாக்களில் 70 சதவிகிதம் இந்தியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றும் 86 சதவிகிதத்தினரின் கைகளில் இருப்பது இந்த விசாதான்.
ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள மாற்றம் என்ன?
ஹெச்1பி விசாக்கள் மூலமாகப் பணியாற்று கிறவர்களின் குறைந்தபட்ச ஊதிய அளவு மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் (ஆண்டுக்கு ரூ.44 லட்சத்தில் இருந்து ரூ.66 லட்சமாக), அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு வைத் திருக்கும் இந்தியர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இதற்குப் பதிலாக உள்ளூர் அமெரிக்கர்களுக்கு வேலை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், இதை எதிர்த்துப் போராடி வருகின்றன. டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ் உள்பட பல நிறுவனங்கள் வழக்குத் தொடரவும் முடிவெடுத்துள்ளன.

அமெரிக்காவில் வேலை, திருமணம் என்கிற கன வோடு இருக்கும் பெண்களை இது எந்தவிதத்தில் பாதிக்கிறது?  ஹெச்.ஆர். மேனேஜ்மென்ட் மற்றும் ஆர்கனைசேஷனல் பிஹேவியர் விரிவுரையாளர் டாக்டர் ரேவதி சொல்கிறார்…
“என்.ஆர்.ஐ மணமகனைத் திருமணம் செய்துகொள்ள இனி பெண்கள் யோசிப்பார்கள். திருமணத்துக்குப் பின்னர் அமெரிக்காவில் வேலைபார்க்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கும் இது ஒரு தடையாகவே உள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அறிவிப்பு இரண்டு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். அமெரிக்காவில் படித்தபடியே பணிபுரியவும், படித்து முடித்த பின்னரும் மூன்று ஆண்டுகள் வரை வேலை பார்க்கவும் வாய்ப்பு இருந்தது. இந்த மசோதாவில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்களால் இந்திய மாணவி கள் இதுபோன்ற வாய்ப்புகளை இழக்கலாம்.

ஐ.டி துறை சார்ந்து படிக்கும் பெண்களில் பலரும் என்.ஆர்.ஐ மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொண்டு, வெளிநாட்டில் வேலையோடு செட்டி லாக விரும்புகின்றனர். இந்த விசா மாற்றத்தால் திருமணத்துக்குப் பின், பெண்கள் அமெரிக்காவில் வேலை பார்ப்பதில் சிக்கல் உள்ளது. இதனாலும், பெண்கள் அமெரிக்கா வில் பணிபுரியும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்கக்கூடும்’’ என்கிறார் ரேவதி.
கான்ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் இண் டஸ்ட்ரியின் இந்தியன் வுமன் நெட்வொர்க் தலைவர் மதுவசந்தியிடம் இதுகுறித்துக் கேட்டோம்.
‘‘ஹெச்1பி விசாவில் கொண்டுவரப்பட உள்ள மாற்றங்களால், இந்தியாவுக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு வகையான விளைவுகளையும் நான் பார்க்கிறேன். அமெரிக்க நிறுவனங்களுக்காக இந்திய இளைஞர்கள் முதலீடு செய்யும் அறிவும் திறமையும் இனி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பயன்படும்.

இந்தியாவில் இருந்து திருமணமாகி அமெரிக்கா செல்லும் பெண்கள், இனி அங்கு எம்.எஸ் படித்து முடித்தால் மட்டுமே வேலைபார்க்க முடியும். இது அவர்களின் திறனை மேம்படுத்துவதாக அமையும்தான். ஆனால், இந்தப் படிப்பை முடிக்க ரூ.35 லட்சம் வரை செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால், பெண்கள் அமெரிக்க வேலைக்குச் செல்வது மற்றும் அமெரிக்க மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்வது – இரண்டுமே பாதிக்கப்படும். ஆண்கள் மத்தியிலும் இதேபோன்ற பாதிப்புகள் சாத்தியம். திருமணத்துக்குப் பின்னர் பிரிந்து வாழ்வது அர்த்தமற்ற விஷயம். இதனால் திருமணமான இந்திய இளைஞர்களும், இளம்பெண்களும் இங்கேயே பணியாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
இப்போது, இதை ஓர் அறிவிப்பாகவே ட்ரம்ப் வெளி யிட்டுள்ளார். இது இன்னும் சட்டமாக இயற்றப்படவில்லை. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த அறிவிப்பைத் திரும்பப் பெற அமெரிக்க அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்’’ என்கிறார் மதுவசந்தி.

Advertisements
%d bloggers like this: