Daily Archives: மார்ச் 5th, 2017

ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டுவரப்பட்டபோது…” – மர்மம் உடைக்க வருகிறது சி.பி.ஐ

ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழ ஆரம்பித்துள்ளன. ‘கூட்டாளிகள் பிரிந்தால்தான் களவாணி வெளிப்படுவான்’ என்பார்கள். அ.தி.மு.க இரண்டுபட்டதால் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளது. ஜெயலலிதாவின் மரணத்தில் சில இருண்ட பக்கங்கள் இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சொல்ல ஆரம்பித்துள்ளார். அவருக்கு ஆதரவாக இருக்கும் 12 எம்.பி-க்கள் கடந்த 27-ம் தேதி அன்று டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ‘ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள். ‘குற்றவாளியை நெருங்கி விட்டோம்’ என்கிறார் பி.ஹெச்.பாண்டியன். தமிழக அரசியல் மீண்டும் இப்போது ஜெயலலிதா மரணத்தையொட்டிய கொந்தளிப்பில் இருக்கிறது.
27 கேமராக்கள் நிறுத்தப்பட்டன!

Continue reading →

மிஸ்டர் கழுகு: அரசர் பதவிக்கு ஆபத்து!

கை நிறைய புத்தகங்களோடு திடுமென வந்து நின்றார் கழுகார். ‘‘இந்த ஆண்டு பிறந்த நாளில் தனக்குப் புத்தகங்கள் பரிசளிக்குமாறுச் சொல்லிவிட்டார் ஸ்டாலின். அதனால், அறிவாலயத்தைச் சுற்றியிருக்கும் புத்தகக் கடைகளில் நல்ல வியாபாரம்’’ என்றார்.
‘‘பிறந்த நாள் விழாவில் புதிய முகங்கள் தென்பட்டனவே?’’ என்றோம்.
‘‘பிறந்த நாள்அன்று காலையில் தனது வீட்டில் கேக் வெட்டி, அப்பாவிடம் ஆசீர்வாதம் வாங்க கோபாலபுரம் போனார் ஸ்டாலின். ஆனால், கருணாநிதி ரெடி ஆகாமல் இருந்ததால், அங்கிருந்து நேராக அண்ணா அறிவாலயம் வந்துவிட்டார். மதியம்தான் மீண்டும் அவர் கோபாலபுரம் போய் அப்பாவைப் பார்த்து, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

Continue reading →

ஜெயிலில் சசி நடத்தும் குடும்ப பஞ்சாயத்து -நக்கீரன் 3.3.2017

ஜெயிலில் சசி நடத்தும் குடும்ப   பஞ்சாயத்து  -நக்கீரன் 3.3.2017

Continue reading →

ஆட்சியை காப்பாற்ற 500 கிலோ தங்கம் -நக்கீரன் 3.3.2017

ஆட்சியை காப்பாற்ற 500 கிலோ தங்கம்  -நக்கீரன் 3.3.2017

Continue reading →

கைவிரித்த மோடி -நக்கீரன் 3.3.2017

கைவிரித்த மோடி -நக்கீரன் 3.3.2017

Continue reading →

ராங் கால் – நக்கீரன் 3.3.2017

ராங் கால் – நக்கீரன் 3.3.2017

Continue reading →

உறவைப் பிரிக்கும் குறட்டை… தவிர்க்க 7 வழிகள்!

இறைவன் நமக்குக் கொடுத்த மிக உயர்ந்த பரிசு தூக்கம். தூக்கம் மட்டும் இல்லையென்றால், மனிதர்கள் மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள். எவ்வளவு பணத்தைக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். அதே நேரத்தில், அருகில் இருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுப்பது, ஒருவர் தூங்கும்போதுவிடும் குறட்டைதான். இதைச் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. 2013-ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் விவாகரத்துக் கேட்டு வரும் தம்பதிகள் சொல்லும் காரணங்களில் குறட்டைக்கும் இடம் உண்டு. ஆக, உறவைக்கூட பிரிக்கும் குறட்டை என்பது நிரூபணமான உண்மை. ஒருவர் விடும் குறட்டை, அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்; மற்றவர்களுக்கு அசூயையைக் கொடுக்கும்.

Continue reading →

கொத்து, வீச்சு, சில்லி… பரோட்டா பிரியர்களே… சிறுநீரகம், கல்லீரல் கவனம்!

பரோட்டா’, `புரோட்டா’, வட இந்தியாவில் `பராத்தா’, மொரீஷியஸில் `ஃபராட்டா’, மியான்மரில் `பலாட்டா’… எப்படி அழைக்கப்பட்டாலும், இது இந்தியர்களை வசீகரிக்கும் ஓர் உணவு. முக்கியமாக தெற்காசியா முழுக்கப் பிரபலமான ஒன்று. இதன் அலாதியான சுவை காரணமாகவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர், மலேஷியா, மொரீஷியஸ், மாலத்தீவுகள், பங்களாதேஷ்… எனப் பல நாடுகளில் பிரபலமாகியிருக்கிறது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் மிக எளிமையாகத் தயாரிக்கப்படுகிற, அதே நேரத்தில் பிரபலமான உணவு. பரோட்டா குறித்த சர்ச்சை அவ்வப்போது எழுவதும், ஆறிப்போவதும் இங்கே வழக்கம். பரோட்டா அப்படி என்னதான் நம் உடலுக்குத் தீங்கு விளைத்துவிடும்…

தெரிந்துகொள்வோமா?

Continue reading →