Daily Archives: மார்ச் 6th, 2017

மஞ்சள் பால்… ஆரோக்கியத்தின் அதிசய ரகசியம்!

வெறும் பாலைக் குடிக்காதே… அதுல ஒரு துளி மஞ்சள் பொடி கலந்து குடி’ என்பார்கள் நம் வீட்டுப் பாட்டிகள். ஜலதோஷம் பிடித்தால், தொண்டை வறண்டால், வறட்டு இருமல் வந்தால் மட்டுமே நாம் மஞ்சள் தூள் பால் அருந்துவோம். சச்சின் டெண்டுல்கர் தினமும் இரவில் உறங்கச் செல்வதற்கு முன்னர் மஞ்சள் தூள் கலந்த பாலைத்தான் குடிப்பாராம். உண்மையில், நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றதை சரியாகப் புரிந்துகொண்டு பின்பற்றாததுதான் இன்றைக்குப் பல நோய்களுக்குக் காரணம். அவற்றில் மஞ்சள் பால் ரகசியமும் ஒன்று. இது ஓர் ஆரோக்கிய அதிசயம். இதைக் குடிப்பதால் கிடைக்கும் மருத்துவப் பலன்கள் ஏராளம். அவை…

தங்கமான பலன்கள்…

Continue reading →

முத்து போன்ற பற்களுக்கு!

சிரிப்பு. மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். மற்றவர் கவரும் வகையில் சிரிப்பு இருக்க வேண்டும் என்றால், பற்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பார்ப்போருக்கு, சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

Continue reading →

உடல் வழிபாட்டுக்கு தும்பை

கடவுள் வழிபாட்டுக்கு, தும்பை பூக்கள், அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. காலையில், புதிய பூக்கள் சேகரிக்கப்பட்டு, மனத் தூய்மையின் அடையாளமாக வணங்கப்படுகிறது. முருகக் கடவுளுக்கு, தும்பை மலர்களால் அர்ச்சனை செய்யப்படுவதுண்டு.
பெரும்பாலும், மணற்பாங்கான நிலத்திலேயே தும்பை, அதிகம் வளர்கிறது. விவசாய நிலங்களில், இந்த செடி, மழை காலங்களில் சாதாரணமாகக் காணப்படும். முழுத்தாவரமும் மருத்துவப் பயன்

Continue reading →

தூக்கம், நிம்மதி, மகிழ்ச்சி… விரட்டும் மனஅழுத்தம்?! தீர்வுகள் இங்கே..!

டென்ஷன்… இதைப்போல மோசமான ஒன்று வேறு இல்லை. எல்.கே.ஜி படிக்கும் குழந்தைக்குக்கூட பள்ளிக்குப் போகும் அவசரத்தில் ஆரம்பமாகிவிடுகிறது டென்ஷன். அப்பா, அம்மாவுக்கு ஆபீஸ்… தாத்தா-பாட்டிக்கு தனிமை… இப்படி எல்லோருக்கும் ஏதோ ஒருவித டென்ஷன்! இது தொடர்ந்தால் உருவாவதுதான் `ஸ்ட்ரெஸ்’ எனப்படும் மனஅழுத்தம். இதற்கு ஆளானவர்களால் தெளிவாக சிந்திக்க முடியாது; நிம்மதி பறிபோய்விடும்; படபடப்பு தொற்றிக்கொள்ளும். மனஅழுத்தம், சாதாரண பிரச்னை இல்லை… அதிகமானால், தற்கொலை உணர்வைத் தூண்டி ஆளையே காலி பண்ணிவிடும். இன்றைக்கு உலக அளவில் மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் கோடிக்கணக்கான பேர். இது ஏன் வருகிறது, இதனால் உருவாகும் நோய்கள், தீர்வுகள்…

Continue reading →