Advertisements

இரத்த அழுத்தத்திற்கான காரணம் இதுவா??

லண்டன்: மனித உடலில் பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு இரத்த அழுத்தம் மூலக் காரணமாக உள்ளது. குறைந்த அளவிலான இரத்தம் சோர்வு, அசதி உள்ளிட்டவற்றை உண்டாக்குவதும், உயர் இரத்த அழுத்தத்தால் ஆத்திரம், கோபம் போன்று உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் காரணமாய் இரத்த அழுத்தம் உள்ளது.
இதுவரை இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களினால் ஏற்படுகிறது என்றே மருத்துவர்களால் நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இரத்த அழுத்தம் ஏற்பட மூலக் காரணம் இரத்த நாளங்களை சுற்றி இருக்கும் நரம்புகள் தான் என்பது தெரியவந்துள்ளது.

 
இரத்த நாளங்களை சுற்றி இருக்கும் நரம்புகள் வெளிப்படுத்தும் நைட்ரிக் ஆக்சைடு மூலம் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது என பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த நரம்புகள் நேரடியாக மூளையுடன் இணைந்திருப்பதால் நம் உடலில் இரத்த அழுத்த பாதிப்பு உண்டாகிறது.
நம் உடலில் இரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் துவக்கத்திலேயே வெளிப்படாது, மேலும் இதன் அறிகுறிகள் வெளிப்படும் போது அதனை கட்டுப்படுத்தும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு. இதனால் இரத்த அழுத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, உடல் பாகங்கள் செயல் இழந்து போவது உள்ளிட்டவை ஏற்பட்டு வருகிறது.
தற்சமயம் இரத்த அழுத்தத்திற்கான மூலக் காரணம் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து இந்த நோய்க்கான தீர்வு புதிய வகை மருத்துவத்திற்கு வழி செய்யும். இது எதிர்காலத்தில் இரத்த அழுத்த நோய் ஏற்படுவதையே முற்றிலுமாக தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘எங்களது கண்டுபிடிப்பு இதுவரை இரத்த அழுத்தத்தை நாம் பார்த்து வந்த விதத்தையே முற்றிலும் மாற்றியமைக்கும். இரத்த நாளங்களை சுற்றியிருக்கும் நரம்புகள் வெளிப்படுத்தும் நைட்ரிக் ஆக்சைடு மூலம் இரத்த அழுத்தம் ஏற்படுவதால் இதற்கான புதிய வகை மருத்துவம் நேரடி தீர்வை வழங்கும்’, என கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை இதயவியல் நிபுணர் அஜய் ஷா தெரிவித்துள்ளார்.

Advertisements
%d bloggers like this: