Advertisements

5 மாநில தேர்தல்; ஆட்சி யாருக்கு? கருத்துக்கணிப்பு வெளியீடு

புதுடில்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என பல்வேறு நிறுவனங்கள் தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது.

இந்தியா டுடே கணிப்பு:

இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் ; பஞ்சாபில் ஆம்ஆத்மி கட்சிக்கு 42 முதல் 51 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 62 முதல் 71 தொகுதிகளும், பா.ஜ., அகாலிதள கூட்டணிக்கு 4 முதல் 7 வரை மட்டுமே கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மீண்டும் பா.ஜ., மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்கிறது.

பா.ஜ.க., 46லிருந்து 53 இடங்களை கைப்பற்றும் எனவும் காங்கிரஸ் 12லிருந்து 21 இடங்களையே பிடிக்கும் என இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

கோவா மாநிலத்தில் மொத்தம் 40 இடங்களில் பா.ஜ.க., 18 லிருந்து 22 இடங்களை பிடிக்கும் என்றும் காங்கிரஸ் 9லிருந்து 13 இடங்களை பிடிக்கும் என்றும் ஆம்ஆத்மி 2 இடங்களை பிடிக்கும் என்றும் எம்.ஜி.பி-சேனா-3லிருந்து 6 இடங்களை பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்கும். மொத்தம் உள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 30 லிருந்து 36 இடங்களையும், பா.ஜ., 16 லிருந்து 22 இடங்களையும் பி.எஸ்.பி 3லிருந்து 5 இடங்களையும் என்.பி.எப் 3 லிருந்து 6 இடங்களையும் பிடிக்கும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பா.ஜ.,கூட்டணிக்கு 251 -லிருந்து 279 இடங்களும் சமாஜ்வாதி-காங்., கூட்டணிக்கு 88 லிருந்து 112 இடங்களும் பகுஜன் சமாஜ்க்கு 28 லிருந்து 42 இடங்களும் கிடைக்கும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:

டைம்ஸ் நவ் மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில்
உபியில் பா.ஜ.,வுக்கு 180 இடங்களும், காங்கிரஸ், சமஜ்வாடி கூட்டணிக்கு 136 இடங்களும், மாயாவதியின் பிஎஸ்.பி கட்சிக்கு 77இடங்களும், மற்றவர்களுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என டைம்ஸ்நவ் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.கோவாவில் பா.ஜ.,வுக்கு 15 முதல் 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 18 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் வரையிலும், மற்றவர்களுக்கு 2 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 25 முதல் 31 தொகுதிகளும், காங்., கட்சிக்கு 17 முதல் 23 தொகுதிகளும், மற்றவர்களுக்கு 9 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தள கூட்டணிக்கு 7 இடங்களும், காங்., கட்சிக்கு 48 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 61இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 44 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்களும், மற்றவர்களுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

என்.டி.டிவி., கணிப்பு:

என்.டி.டிவி., மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு 193, சமாஜ்வாடி காங்.,கூட்டணி -120 பகுஜன்சமாஜ் – 78 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.கோவா: இங்கு பா.ஜ.,வுக்கு 15 முதல் 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 18 தொகுதிகளும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் வரையிலும், மற்றவர்களுக்கு 2 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.மணிப்பூர்:பா.ஜ.,வுக்கு 25-31 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 23 தொகுதிகளும் மற்றவர்களுக்கு 9 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.பஞ்சாப்:அகாலிதளத்திற்கு 6, காங்.,கிற்கு 60, ஆம் ஆத்மிக்கு 50 தொகுதிகள் கிடைக்கலாம்.
சிஎன்என் நியூஸ்-18:
உ.பி.,யில் பா.ஜ., 185 தொகுதிகளும், காங்கிரஸ் -சமாஜ்வாதி கூட்டணிக்கு 120 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 90 தொகுதிகளும் கிடைக்கும்.
உத்தர்காண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 38 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதளும், மற்றவர்களுக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும்.
பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு 57 தொகுதிகளும், காங்கிரசுக்கு 53 தொகுதிகளும் அகாலி தளம் – பா.ஜ., கூட்டணிக்கு 7 தொகுதிகளும் கிடைக்கும்.
இந்தியாவின் பெரிய மாநிலமான உ.பி.,யில் பா.ஜ.,வுக்கே பெருவாரியான வெற்றி கிடைத்தாலும், ஆட்சி அமைக்க மேலும் சில தொகுதிகள் தேவைப்படும்.

Advertisements
%d bloggers like this: