Daily Archives: மார்ச் 14th, 2017

65 வயதுக்கு பிறகுதான் கமல்ஹாசனுக்கு ஞானோதயம் வந்துள்ளதா? முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நடிகர் கமல்ஹாசனுக்கு 65 வயதுக்கு பிறகுதான் ஞானோதயம் வந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் சேலத்தில் இன்று மாலை நடைபெற்றது.

பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற்ற விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அவருடன், தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Continue reading →

வாழ்வில் தவறே செய்யாதவர்களுக்கு ஐன்ஸ்டீன் என்ன சொல்கிறார்!? – பிறந்ததின சிறப்புப் பகிர்வு

”நீ மிகவும் மோசமாகத் தேர்வு எழுதியிருக்கிறாய்; கணிதம், பெளதிகம் இரண்டைத் தவிர, வேறு எந்தப் பாடத்திலும் தேர்வு பெறவில்லை; மொழிகளில் உனக்குப் போதிய அறிவு இல்லை; இந்தநிலையில், நீ இங்குச் சேர விரும்புகிறாய். அது, உன் அறிவுக்கு மீறிய ஆசையாகும். நீ மறுபடியும் பயிற்சிப் பள்ளிக்குச் சென்று படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படித் தேர்ச்சிபெற்று வந்தால், நான் உன்னைச் சேர்த்துக்கொள்கிறேன்” – இது, தொழில்நுணுக்கக் கல்விக்கான நுழைவுத் தேர்வில் தோற்ற ஒருவரைப் பார்த்து… ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத் தலைவர் சொன்னது. பின்னாளில், அந்தத் தேர்வில் தோற்ற மனிதர்தான், அகிலம் வியந்த அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். அவருடைய பிறந்த தினம் இன்று.

குழந்தைகளின் மனநிலை!

Continue reading →

ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறதா இரட்டை இலை?

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க பொதுச்செயலாளராக  சசிகலாவை நியமனம் செய்தது செல்லாது என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தேர்தல்ஆணையத்திடம் கொடுத்துள்ள புகார்தான் தமிழக அரசியலில் தற்போது அதிகம் விவாதிக்கப்படும் செய்தியாக மாறியுள்ளது.’அ.தி.மு.க-வில் ஐந்து

Continue reading →

கல்லீரல் – உயிர் காக்கும் போராளி!

காலையில் எழுந்ததும் வாக்கிங் போவது, பால் பூத்துக்குப் போய் பால் வாங்கி வருவது, சாப்பிட்ட கேசரி குடலில் செரிப்பது, பொத்தான் அளவில் இருக்கிற ‘பாராசிட்டமால்’ மாத்திரை ஆறடி உடம்பின் காய்ச்சலைக் குறைப்பது, மீசையில் பூசிய ‘டை’ அலர்ஜி ஆவது, ஆபீஸில் இரண்டு ஆள் வேலையை ஒரே ஆள் பார்ப்பது, ராத்திரி ஆனதும் டி.வி பார்த்துவிட்டு உறங்குவது… இப்படி நாள் முழுவதும் உடலில் நடக்கிற நிகழ்வுகளுக்குத் தேவையான சக்தியையும், சத்துக்களையும் தருவது எது என்று நினைக்கிறீர்கள்? ‘உடலின்

Continue reading →

ஆயுளைக் கூட்டும் ‘உயிர்’ உணவுகள்!

புத்தம்புதிய, பசுமையான பழங்கள், காய்கறிகள், கீரைகள், தானியங்கள்  மற்றும்   முளைவிட்ட பயறுகளை ‘உயிர் உள்ள உணவுகள்’  (live foods) என்று கூறுகிறோம். ஏனெனில், அவை சுவாசித்துக் கொண்டு இருக்கின்றன.

மனிதனின் ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுக்குப் பசுமையான உணவு மிக அவசியமானதாகும். இந்த ‘உயிர் உணவு’ கருத்தாக்கம் நேற்று, இன்று தொடங்கியது அல்ல… உயிர் உணவுகளின் தேடல் என்பது ஆதிமனிதன் காலத்திலேயே தொடங்கிவிட்டது. உயிர் உள்ள உணவுகளை, அவற்றின் இயல்பான நிலையில் உண்ணும்போது அதிகபட்ச ஊட்டச்சத்தினைப் பெறலாம்.
உயிர் உணவின் நன்மைகள்

Continue reading →