மினிமம் பேலன்ஸ் 50 ரூபாய்தான்… – வங்கி சேவையில் கலக்கும் அஞ்சல் அலுவலகங்கள்!
கடிதம், தந்தி கூடவே அஞ்சல் அலுவலகத்தை யும் மறந்துவிட்டோம். ஆனால், அஞ்சல் அலுவ லகங்கள்தான் மக்களை எப்போதும் மறப்பதில்லை. இப்போது புதிதாக உதயமாகியுள்ள ‘இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க்’ என்னும் அஞ்சல் அலுவலக வங்கியின் மூலம் ஒரு புதிய திட்டம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. வெறும் 50 ரூபாயில் சேமிப்புக் கணக்கு தொடங்கி, ஏடிஎம் கார்டு பெறும் திட்டம்தான் அது. பொதுத் துறை வங்கிகளும் தனியார் துறை வங்கிகளும் தாங்கள் அளிக்கும் வங்கிச் சேவைகளுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்துக்கொண்டிருக்க, இந்தத் திட்டம் மக்களிடம் படுவேகமாக பிரபலமாகி வருகிறது.
பேச்சுரிமையும், பொய்ச் செய்திகளும்
தகவல் வெளியிடும் உரிமை குறித்து எல்லா நாடுகளும், தமது சட்டத்தில் சொல்லி இருக்கின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 19ல் அது அடிப்படை உரிமையாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது.இந்நிலையில் எது பேச்சுரிமை? எவை எல்லாம் செய்தியில் அடங்கும்? எவையெல்லாம் ‘பேச்சு’ எனும் வரையறைக்குள் வரும்? ‘பேச்சும்’ செய்தியும் ஒன்றா வெவ்வேறா?இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘பேச்சுரிமை’ என்பது பேச்சு மட்டுமல்ல. சொல்ல நினைத்த ஒரு தகவலை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை. அதை, எப்படி எதன் மூலமும் வெளிப்படுத்தலாம். எழுத்தாகவோ, பாட்டாகவோ, கலைப்படைப்பாகவோ அவை இருக்கலாம். (freedom of speech and expression)அப்படியான ‘தகவல்/கருத்து வெளிப்படுத்தும் உரிமையின்’ கீழ்தான் பேச்சுரிமையும் வருகிறது.இதில் அதிகம் ஈடுபடுவது செய்தியாளர்களே…
செய்தியாளரின் திறமை
பூச்சிகளே உணவு!
`2050-ம் ஆண்டில் உலகின் முக்கிய உணவுப்பொருளாக இருக்கப்போவது பூச்சிகள்தான்’ என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறது ஐ.நா சபை.
`உலகின் மொத்தப் பரப்பளவில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், ஏற்கெனவே பூச்சிகளை உணவாக உட்கொள்ள ஆரம்பித்து விட்டன. இன்னும் சில ஆண்டுகளில், இந்தியாவிலும் இந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்’ என பயமுறுத்துகிறது ஐ.நா.
`இனிவரும் காலங்களில், மனித உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கும் உணவுகளை மட்டுமே உற்பத்தி செய்தால் போதும். நெல், கோதுமை உள்ளிட்ட தானியங்களைப் பயிர் செய்ய, பல லட்சம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மக்கள்தொகைப் பெருக்கம், வறட்சி போன்றவற்றின் காரணமாகச் சாகுபடி நிலங்கள் குறைந்துவரும் சூழலில், அது சாத்தியமில்லாத ஒன்று.
கோடையில் கவனம்!
போதிய மழை இல்லாமல், வெயில் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. இச்சமயத்தில், வெளியில் பணிக்கு செல்பவர்களுக்கு, உடலில் நீர் வறட்சி ஏற்படும். இதுபோன்ற சமயத்தில், உடலில் நீர் வறட்சியாகாமல் இருக்க, தேவையான அளவு நீரையும், அதற்கு ஏதுவான பழங்களையும் உட்கொண்டு வந்தால், எவ்வித பாதிப்பில் இருந்தும் தற்காத்துக் கொள்ளலாம்.