சலுகைக் கட்டணத்தில் விமானப் பயணம்! – என்ன லாபம், என்ன சிக்கல்..?
சிங்கப்பூர் சென்றுவர வெறும் ரூ.4,500-ல் விமானக் கட்டணம்; பாங்காக் சென்றுவர வெறும் ரூ.6,000-ல் விமான டிக்கெட்… என்கிற விளம்பரங்களை எல்லாம் பார்க்கும்போது, ‘அட, கட்டணம் ரொம்ப குறைச்சலா இருக்கே. பேசாம நாமே ஒரு டிக்கெட் வாங்கி சிங்கப்பூர் போய் வரலாம்போல!’ என்கிற ஆசை நம்மில் பலருக்கு வரும். மூன்று மாதம், ஆறு மாதங்களுக்குப் பிறகான விமான டிக்கெட்களை, மலிவு விலையில் நம்பி வாங்கலாமா, இந்த மலிவு விலை விமான டிக்கெட்டுகளை வாங்குவதினால் என்ன நன்மை, என்ன தீமை?
பனை பொருள் சாப்பிட்டால் பலன்
மனிதன் மறந்து வரும் பாரம்பரியங்களில் பனை மரமும் ஓன்று. பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரமாகும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு தரும் நன்மைகள் ஏராளம்.
வெயில் காலத்தில் நம்மை பாதுகாக்க, இயற்கை தந்துள்ள வரப்பிரசாதம் தான் பனைமரம். கோடையில் நம் உடலுக்குத் தேவையான நீர்ச் சத்துக்களை வாரி வழங்குகிறது நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும், அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
தேங்காய் எண்ணெய்
கற்பக விருட்சம் என அழைக்கப்படுகிற தென்னை மரம், இயற்கை நமக்கு அளித்த கொடைகளில் முக்கியமானது. மருத்துவத் துறையிலும் அழகுத் துறையிலும் தேங்காய் எண்ணெயின் பங்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.அந்தக் காலத்தில் எல்லாம் தலைக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமே உபயோகித்து வந்தார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெயின் மகத்துவம் தெரிந்திருந்தது. இயற்கையான ஆன்ட்டி பாக்டீரியல் மற்றும் ஆன்ட்டி ஃபங்கல் தன்மைகளைக் கொண்டிருந்ததாலும், இயற்கையான மாய்சரைஸராக இருப்பதாலும் சருமத்துக்கும் கூந்தலுக்கும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினார்கள். மற்ற எண்ணெய்களைவிடவும் தேங்காய் எண்ணெய்க்கு சருமத்தினுள் ஊடுருவும் தன்மை அதிகம் என்பது இன்னொரு காரணம்.
பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!
உமையுடனும் முருகப்பெருமானுடனும் கூடியுள்ள சிவ திருவடிவம் – சோமாஸ்கந்தர். ஸக + உமா + ஸ்கந்தர் என பதம் பிரித்து விவரிக்கின்றன ஞானநூல்கள். இதில், ‘ஸக’ என்பதற்கு இணைந்துள்ள, சேர்ந்துள்ள என்று பொருள்.
கல்வெட்டு குறிப்புகள் இந்தத் திருவடிவை ‘உமாஸகந்த சகிதர்’ என்கின்றன. அற்புதமான இந்தச் சிவ வடிவை வழிபடுவதால், இம்மையில் சகல சுக போகங்களும், மறுமையில் சிவப்பேறும் கிடைக்கும் என்பது உமாதேவியின் திருவாக்கு!