Advertisements

கருத்தரிப்பு மையங்களில் என்ன சிகிச்சை அளிக்கிறார்கள்?

குழந்தையின்மைப் பிரச்னை யால் பாதிக்கப்பட்டிருக்கும் தம்பதியரின் எண்ணிக்கை 20 ஆண்டுகளாக அதிகரித்துவருவது, கருத்தரிப்பு மையங்களுக்கு சாதகமாக மாறியிருக்கிறது.குழந்தையின்மைக்காகச் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைகளை நாடுவது என்கிற முடிவுக்கு வரும் தம்பதியர், அதற்கு முன் சில விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். கணவன் – மனைவி இருவரில் யாருக்கு எந்த மாதிரியான பிரச்னைகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து சிகிச்சை முறை மாறுபடும். ஆண்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கை, அவற்றின் நகரும் திறன், அவற்றின் வடிவம் ஆகியவை மிகவும் முக்கியம். பெண்களுக்கு கருக்குழாய், கர்ப்பப்பை, கருமுட்டை, ஹார்மோன்கள் போன்றவற்றில் கோளாறு இருக்கிறதா எனப் பரிசோதிக்க வேண்டும். 

ஐ.யூ.ஐ (IUI – Intra uterine insemination)


ஆணின் விந்தணுவை எடுத்து நேரடியாகப் பெண்களின் கர்ப்பப்பையில் செலுத்தும் தொழில்நுட்பம் இது. ஆணுக்குக் குறைந்தபட்சம் ஒன்றரை கோடி உயிரணுக்கள் இருப்பது அவசியம். குறைவாக இருப்பின், ஐ.யூ.ஐ முறை ஏற்றது. இம்முறையில் இரண்டு அல்லது மூன்று கரு உருவாகும் வாய்ப்பும் இருக்கிறது. சிலர் இந்த சிகிச்சையை பல முறை எடுக்க வேண்டியிருக்கலாம்.

ஐ.வி.எஃப் (டெஸ்ட் டியூப் பேபி)

ஒரு கோடிக்கும் குறைவான உயிரணுக்கள் கொண்ட ஆண்களுக்கும், சினைப்பை நன்றாக இருந்தும் கருக்குழாய் வளர்ச்சி சரியில்லாத பெண்களுக்கும் பலனளிப்பது இம்முறைதான். பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகள் முதலான சிகிச்சைகள் கொடுத்து, முட்டைகள் பெறப்பட்டு பாதுகாக்கப்படும். ஆண்களிடம் விந்து பெறப்பட்டு, நல்ல உயிரணுக்கள் மேம்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும். ஒரு டெஸ்ட் டியூபில் பெண்களின் கருமுட்டைகளில் உயிரணுக்களைச் செலுத்தி எம்ப்ரியோஸ்கோப்பி கருவியில் பாதுகாப்பாக வைக்கப்படும். கருவும் உயிரணுவும் இணைந்து எம்ப்ரியோக்கள் உருவான பிறகு மூன்றாவது அல்லது ஐந்தாவது நாளில் எம்ப்ரியோ, மனைவியின் உடலில் செலுத்தப்படுகிறது. இந்த முறையிலும் இரண்டு மூன்று சுழற்சிகள்கூட தேவைப்படலாம். இம்முறையிலான சிகிச்சையில் குழந்தை  பிறக்கும் வாய்ப்புகள் 45 – 55 சதவிகிதம்.
டோனர் ஊசைட் புரோகிராம்
கணவனுக்கு விந்தணுக்கள் நன்றாக இருக்கிறது… மனைவிக்கு கருமுட்டை சரியாக வரவில்லை, அல்லது கருமுட்டை இருப்பே இல்லை என்பது போன்ற தருணங்களில் இந்தச் சிகிச்சைமுறை பயன் படுத்தப்படுகிறது. இன்னொரு பெண்ணிடம் இருந்து தானம் பெறப்பட்ட கருமுட்டையுடன், கணவனின் விந்தணுவைச் சேர்த்து கருவை உருவாக்கி மனைவியின் கர்ப்பப்பையில் வைத்துவிடுவார்கள்.
வாடகைத்தாய்
கர்ப்பப்பையில் கோளாறு இருந்தால் கர்ப்பமாக முடியாது. இதுபோன்ற தருணங் களில் வாடகைத் தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம். கணவனின் விந்தணுவையும், மனைவியின் கருமுட்டை யும் தனித்தனியாகப் பெற்று கரு உருவாக்கி வாடகைத் தாயாக விரும்பும் பெண்ணின் கர்ப்பப்பை யில் கருவைச் செலுத்தி குழந்தையைப் பெற்றெடுக்க வைக்க முடியும்.
இந்த நான்கு முறைகள்தான் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் அதிகளவு புழக்கத்தில் உள்ளன.   அவரவர் உடல்நிலையைப் பொறுத்து சிகிச்சைகள் மாறுபடலாம். இந்தச் சிகிச்சைகளுக்கு மையத்தைப் பொறுத்து பல ஆயிரங்களில் தொடங்கி பல லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
பொதுவாக, செயற்கை கருத்தரிப்பு முறையைத் தேர்ந்தெடுக்கும்போது, அதற்காக எடுத்துக்கொள்ளப்படும் சிகிச்சைகள், மாத்திரைகள், மருந்துகள் போன்றவற்றால் பெண்ணின் உடல் பாதிக்கப்படும் அபாயம் அதிகம். சிலருக்கு ஹார்மோன் சமச்சீரின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.  ஆகவே, சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன ரிஸ்க் இருக்கிறது என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு தேர்ந்தெடுப்பதே நல்லது.
உடல்நலப் பிரச்னைகள் என் பதைத் தாண்டி, சில அதிர்ச்சிகரமான மோசடிகளும் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நடப்பதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியளிக்கின்றன.  அதோடு, கருத்தரிப்பு சிகிச்சைகள் அளிக்கும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் எவை எனத் தெரிந்துகொண்டு, பிறகு சிகிச்சைக்குச் செல்வதே பாதுகாப்பானது.

Advertisements
%d bloggers like this: