Advertisements

ராங் கால் – நக்கீரன் 26.03.2017

ராங் கால் – நக்கீரன் 26.03.2017

1a2a3a4a

Advertisements

One response

  1. அரசியல் என்று ஒன்றுக்கு வந்துவிட்டால் அங்கு தன் மதம், மொழி, தன் விருப்பம், வெறுப்பு எல்லாம் அடிபட்டுப் போய்விட வேண்டும். எவர் ஒருவர் தன்னை முழுதும் மக்கள் நலனுக்காகவே அர்ப்பணித்து விடுகிறார்களோ அப்போது அந்த மக்கள் குறையின்றி வாழும்போது நாடு செழிப்படைகிறது, அந்த அரசியல் தலைவரும் மக்கள்மனதில் நீங்கா இடம்பெற்று விடுகிறார். இதற்கு உதாரணம் சொல்லப்போனால் இப்போது உயிருடன் இருப்பவர் எவரையும் சொல்ல இயலாது. இப்போதுள்ள அரசியலில், அரசியல்வாதிகள் தன் கட்சி மக்களுக்கு என்னென்ன நன்மை செய்துள்ளது, இனி என்னென்ன நன்மைகள் செய்யக் காத்துக்கிடக்கிறது என்பதை ஒருபோதும் சொல்வதில்லை. மாறாக, எதிர்க்கட்சித் தலைவரின் குணாதிசயங்களையும், அந்தரங்க வாழ்க்கையையும் விமர்சிப்பதிலேயே பெரும்பாலும் கவனம் செலுத்துகிறது. ஸர் சி.ராஜகோபாலாச்சாரியார், கனம் திரு காமராசர், கக்கன், அறிஞர் அண்ணா போன்றவர்கள் ஒருவரையொருவர் எதிரியாக என்றும் கருதாமல் தங்கள், தங்கள் கட்சிக் கொள்கைகளுக்கேற்றவாறு, மக்கள் நலன் ஒன்றையே கருதி தன்னை அர்ப்பணித்திருந்தார்கள். இருந்தாலும், ஒருவருக்கொருவர் தனிவாழ்க்கையில் நட்புடனேயே வாழ்ந்து வந்தார்கள். அதனால்தான் அதைப் பொற்காலம் என்று நாம் இன்றும் போற்றி வாழ்கிறோம். இப்போது, பணமும், எதிர்க்கட்சிக்காரர்களின் குணாதிசயங்களும்தான் அரசியல் நடத்த மூலதனமாகப் போய்விட்டது. இது மிகவும் வேதனைக்குறிய ஒன்றுமட்டுமல்ல, நாட்டையும் சீர்குலைக்கிறது!

%d bloggers like this: