பாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்..

பெண்களை பெரும்பாலும் பாதிக்கும் பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று இந்த பாத வெடிப்பு. உங்களின் முக அழகிற்கு நீங்கள் செலவிடும் நேரத்தில் கொஞ்ச நேரத்தை உங்களின் பாத வெடிப்பை போக்க செலவிட்டாலே போதும். இந்தப் பிரச்சனையிலிருந்து நீங்கள் சுலபமாக விடுபடலாம்.

இரவில் நீங்கள் தூங்க செல்லும் முன் உங்கள் பாதங்களை நன்றாக கழுவி விட்டு சிறிது தேங்காய் எண்ணையை பூச வேண்டும். காலையில் நீங்கள் குளித்தவுடன் காலை நன்றாக துடைத்து விடவும். பின் உங்கள் பாதங்களில் சிறிதளவு விளக்கெண்ணையை தடவுங்கள். இது உங்கள் கால்களில் பாதவெடிப்பு வராமல் தடுக்கும்.
கால்களில் பாத வெடிப்பு வந்திருந்தால் வெது வெது நீரில் சிறிதளவு உப்பும், எலுமிச்சை சாற்றையும் கலக்கவும். பின் உங்கள் கால்களை அந்நீரில் மூழ்கவிட்டு உங்கள் பாதங்களை நன்றாக தேய்க்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர பாதவெடிப்பு நீங்கும்.
கிருமி நாசினியான மருதாணியை உங்கள் பாதங்களில் பூசி உலரவைக்கவேண்டும். பின்பு சுத்தமான நீரில் கழுவி துடைக்கவும். மேலும் வேப்பிலை, சுண்ணாம்பு, மஞ்சள் சேர்த்து அரைத்த கலவையுடன் சிறிதளவு விளக்கெண்ணையை சேர்க்கவும். இந்தக் கலவையை பாதவெடிப்பில் தடவி வார இந்த பிரச்சனை நீங்கும்.
தொடர்ந்து கடுகு எண்ணையை பாதங்களில் தேய்க்க வேண்டும். இது உங்கள் பாதங்களை மென்மையாக்கும். மேலும் வெந்தயக் கீரையை அரைத்து உங்கள் பாதங்களில் தடவ பாதங்கள் மிளிரும்.
அதுமட்டுமில்லாமல் உருளைக் கிழங்கை பொடிசாக வெட்டி வெயிலில் காய வைக்கவும். அதன்பிறகு இந்த உருளைக்கிழங்கு பொடியை தூளாக்கி நீரில் கலந்து உங்கள் பாதங்களில் தடவ பாத வெடிப்பு நீங்கும்.
பப்பாளிப்பழத்தை நன்கு அரைத்து பாதவெடிப்புகளில் தடவி உலரவைக்க வேண்டும். பிறகு தண்ணீரில் கழுவி மீண்டும் பப்பாளிப் பழத்தை தடவி உலரவைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்ய இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணலாம். மேலும் வாழைப்பழத்தையும் இவ்வாறு மசித்து உங்கள் பாதங்களில் தடவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு உலர வைக்க வேண்டும். அதன் பிறகு சுத்தமான நிரில் கழுவி பிறகு குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்திருங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய இந்த பாத வெடிப்பு நீங்கும்.

%d bloggers like this: